அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா கர்நாடக சிறைத்துறை அதிகாரி களுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்தார் என புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சிறை டிஐஜி ரூபா டி.மவுட்கில்.
சசிகலாவை சிக்க வைத்திருக்கும் இவரது புகார் தமிழக அரசியலில் மட்டு மல்லாமல், கர்நாடகாவிலும் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
கர்நாடக மாநிலம் தாவண கெரேவைச் சேர்ந்தவர் ரூபா. கடந்த 2000-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரூபா, தேசிய அளவில் 43-வது இடத்தை யும் பிடித்தார்.
இந்திய காவல் பணியை விரும்பி ஏற்ற இவர், ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎஸ் பயிற்சியில் 5-வது இடத்தையும் பிடித்தார்.
மிகவும் துணிச்சலான ரூபா, துப்பாக்கிச் சுடுவதிலும், குதிரை ஏற்றத்திலும் வல்லவர். இதனால் பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட் டோரின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
பாஜக தலைவர் களுடன் மோதல்
கடந்த 2000-ம் ஆண்டு பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப் பேற்ற ரூபா, கனிமவள கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொண்டார்.
தனது நேர்மையின் காரணமாக அடிக்கடி பணி மாற்றம் செய்யப்பட்ட இவர், யாதகிரி, கதக், தும்கூர் உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பா ளராகவும் பணியாற்றி யுள்ளார்.
தார்வார் மாவட்ட காவல் கண்காணிப் பாளராக இருந்த போது, ஹூப்ளியில் அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் உமாபாரதி பங்கேற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது.
அப்போதைய ஹூப்ளி மாவட்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா (ஜெ.வழக்கில் தீர்ப்பளி த்தவர்) அளித்த உத்தரவின் பேரில், உமா பாரதியை துணிச்சலாக கைது செய்தார்.
இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையராக பணியாற்றிய ரூபா, அரசியல் வாதிகளுக்கு தேவை யில்லாமல் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றார்.
குறிப்பாக அப்போதைய முதல்வர் எடியூரப்பா வாகன அணி வகுப்பில் உரிய அனுமதி இல்லாமல் இடம் பெற்ற வாகனங்களைத் திரும்ப பெற்றார்.
அண்மை யில் அரசியல் கருத்துக் கள் தொட ர்பாக மைசூரு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா உடன் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய வற்றில் கடும் விவாதம் செய்தார்.
ஒரு கட்டத்தில் ரூபாவுக்கு பதில் அளிக்க முடி யாமல் பிரதாப் சிம்ஹா தனது ஃபேஸ்புக் பதிவை நீக்கினார். கர்நாடக குற்றப் பிரிவு ஆணையராக பணி யாற்றிய போது,
அப்போதைய உயர் அதிகாரியிடம் ரூபா நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப் படுகிறது.
எவருக்கும் அஞ்சாதவர்
கடந்த 2010-ம் ஆண்டு ரூபா கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி மனீஷ் மவுட்கில்லை மணந்தார். இவர் கர்நாடக அரசின் ஊரக குடிநீர் விநியோகத்துறை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மாத இறுதியில் கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியாக பொறுப் பேற்ற இவர், பத்தே நாட்களில் பல்வேறு சீர்திருத் தங்களைக் கொண்டு வந்தார்.
இதனால் சிறை டிஜிபி சத்திய நாராயண ராவுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை நடத்தியது தொடர்பாக சத்திய நாராயண ராவ் ரூபாவுக்கு 2 மெமோ (விளக்கம்) அளித்தார்.
இருப்பினும் தளராத ரூபா, சத்திய நாராயண ராவுக்கு எதிராகவே, ஆதாரங் களைத் திரட்டி வெளி யிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. வீட்டில் சாதாரண பெண்ணாக ரூபா வலம் வருவார்.
சிறு வயதில் கற்றுக் கொண்ட பரத நாட்டியத்தையும், இந்துஸ் தானி இசையையும் அவ்வப் போது அரங்கேற்றுவார். கன்னட முன்னணி தினசரி இதழ்களில் ரூபா கட்டுரை எழுதி வருகிறார்.
காவல் துறை சீர்திருத்தம், பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, மனிதாபி மானம் தொடர் பாக அவர் எழுதும் கட்டுரைகளுக்கு வரவேற்பு கிடைக் கிறது.
தற்போது தனது உயர் அதி காரிக்கு எதிரா கவே போர்க் கொடி தூக்கிய தால், நாடு முழுவதும் அறியப்ப டும் ஆளுமை யாக ரூபா உயர்ந் துள்ளார்.