நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப் பட்டுள்ளார்.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17ம் தேதி காரில் வந்து கொண்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தப் பட்டு, காரில் மானபங்கப் படுத்தப் பட்டார்.
இது தொடர்பாக, பல்சர் சுனி என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப் பட்டனர். திடீர் திருப்ப மாக, பல்சர் சுனியின் கூட்டாளி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டு வதாக நடிகர் திலீப், போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில், திலீப்பிடமும், அவருடைய மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர் ஷா ஆகியோ ரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பல்சர் சுனி அளித்த வாக்கு மூலத்தில், "பாவனாவை பாலியல் தொல்லை செய்த போது எடுக்கப் பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தும் கடையில் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.
இதை யடுத்து காவ்யா மாதவன் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். பல்சர் சுனி, பாவனாவை கடத்து வதற்கு முன்பு,
அடிக்கடி தொடர்பு கொண்ட தொலைபேசி எண்களை போலீசார் கண்டறிந்த போது, அந்த எண்கள், திலீப்புக்கு வேண்டிய வர்களின் எண் என்பதை யும் போலீசார் கண்டு பிடித்தனர்.
மேலும், சிறையில் இருந்தபடி, திலீப்பின் மேனேஜ ருடன் பல்சர் சுனி சில முறை பேசி உள்ளார். நடிகர் திலீப்புடன் பல்சர் சுனி நிற்பது போன்ற புகைப் படங்களும் வெளியாகின.
இதை யடுத்து போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடை பெற்றது. அதில், பாவனா வழக்கில், தொடர் புடைய நபர்களை கைது செய்வது என்று முடிவு செய்யப் பட்டது.
இதனால் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் எந்த நேரமும் கைதா வார்கள் என்று எதிர் பார்க்கப் பட்டது. திலீப்பை சில மாதங்கள் முன்பு காவ்யா திருமணம் செய்தி ருந்தது குறிப்பிடத் தக்கது.