பெண்களையும் பாதிக்கும் ஜிஎஸ்டி | Women and GST... !

நெற்றியை அலங் கரிக்கும் திலகம், வளை யல்கள் ஆகியவை பெண் களுக்கு அவசியம் என்பதை மத்திய அரசு நன்றா கவே உணர்ந் திருக்கி றது. 


அதனால் தான் ஜூலை 1 முதல் அமலான சரக்கு மற்றும் சேவை வரிகளில் இவற் றுக்கு முழு வரி விலக்கு அளிக்கப் பட்டது. 

ஆனால் பெண் களின் மாதாந்திர சுகா தாரத்து க்கு உதவும் சானிட்டரி நாப்கி னுக்கு ஜிஎஸ்டி யில் வரி விலக்கும் வரி குறைப்பும் மறுக்கப் பட்ட விநோதமும் அரங்கேறி இருக்கிறது. 

இதற்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் தொடங்கி யிருக்கும் பிரச்சா ரங்கள் புதிய விவாத அலையை உருவாக் கியிருக் கின்றன.

நாப்கின்கள் அழகு சாதனமா?

மத்திய அரசின் பொருளா தார சீரமைப் பில் முக்கிய நடவ டிக்கை என்ற அறிவிப் புடன் வந்து ள்ளது சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி. 

ஜிஎஸ்டி கவுன் சிலுக்கான தொடக்க கால ஆலோ சனைக் கூட்டங் களில், கல்வி மற்றும் சுகா தாரத்து க்கு முழு வரிவிலக்கு உத்தர வாதம் அளிக்கப் பட்டது. 

ஆனால், சுகாதாரப் பட்டியலில் சானிட்டரி நாப்கின்கள் சேர்க்கப் படவில்லை. அவை அழகு சாதனப் பொருட்கள் வரிசையில் 12 சதவீத வரி விதிப்பு பெற்றிருக் கின்றன. 

சுமார் 38 கோடி பருவ மெய்திய பெண்கள் வாழும் நாட்டில் அவர் களின் சுகா தாரம் புறக்கணி க்கப்பட்டி ருக்கிறது. சானிட்டரி நாப்கின் களுக்கு கோரப் பட்ட முழு வரி விலக்கு கிடைக்க வில்லை.

இதை எதிர்த்து சமூக ஊடக ங்களில் பெண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொட ங்கினர். நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு change.org வாயி லாக கோரிக்கை மனு அனுப்பும் இயக் கத்தை நடத்தினர். 

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி இந்தப் போராட்ட த்துக்கு ஆதரவு அளித் ததோடு, 

தன் பங்குக்கு அருண் ஜெட்லிக்குக் கடிதமும் எழுதினார். காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் போராட் டங்களை ஒருங்கி ணைத்தார். 

மும்பை யில் சுய உதவிக் குழு மகளிர் உதவி யுடன் சாயா காக்டே என்ற பெண் ஜூன் 21 அன்று உண்ணா விரதப் போராட் டத்தைத் தொடங் கினார்.

கேள்விக் குறியாகும் பெண்களின் சுகாதாரம்

தன்னார்வ அமைப்பு கள் மேற் கொண்ட ஆய்வு களில், நாட்டில் 12 சதவீத பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின் களை உபயோ கிப்பது தெரிய வந்து ள்ளது. 

மீதியிரு க்கும் 88 சதவீத பெண்கள் பொருளா தாரச் சூழல், அறியாமை, தரமான நாப்கி ன்கள் கிடைக் காதது போன்ற காரணங் களால் மாற்று உபாயங் களுடன் 

தங்களின் மாதாந்திர உதிரப் போக்கைச் சிரமங் களுடன் எதிர் கொண்டு வருகி றார்கள். அவற்றில் பழந்துணி களுக்கு முதலிடம். 

ஏராள மான கிராமப் புறங்களில் செய்தித் தாள், இலைச் சருகுகள், பதப்படு த்திய மணல் போன்ற வற்றைக் கொண்டு பெண்கள் சமாளித்து வருகி றார்கள் என்பது வேதனை.

இது மட்டு மன்றி, கிராமப்புற பள்ளிக ளில் படிக்கும் 23 சதவீதப் பெண் குழந்தை கள் பருவ மெய்திய பிறகு பள்ளிக்கு அனுப்பப் படுவ தில்லை. 

பள்ளி களில் போது மான கழி வறைகள் அல்லது ஓய்வறை கள் இல்லா ததும் சுகாதார மான நாப்கின்கள் கிடைக் காததும் வளரிளம் பெண்கள் இப்படி படிப்பு க்கே முழுக்குப் போட காரண மாகின்றன.

சுகாதாரக் கேடுகள்

முறை யான சுகா தாரமின்மை காரண மாகக் கர்ப்பப் பாதை தொற்று, மகப் பேறினைப் பாதிக்கும் குறை பாடுகள் எனத் தொடங்கி கருப்பை வாய் புற்று நோய் வரைக்கும் பெண்கள் ஆளாகி றார்கள். 

உலகில் கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர் களில் 27 சதவீதம் பேர் இந்தியா வைச் சேர்ந்த வர்கள். 

பெண்க ளின் மாத விடாய் கால சுகாதார த்தில் காட்டப் படும் அலட் சியம், நாட்டின் எதிர் கால சந்ததியை எந்த அளவு க்குப் பாதி க்கும் என்ப தற்கு இந்தப் புள்ளி விவர ங்களே சாட்சி. 

இந்தியா வில் சானிட்டரி நாப்கி ன்கள் தொடர் பான அறியா மையைப் போக்கு வது, எளிய மக்களு க்கும் நாப்கி ன்கள் கிடைக்கச் செய்வது போன்ற வற்றை எந்த அரசும் கண்டு கொள்வ தாகத் தெரிய வில்லை. 

இந்தச் சூழலை வைத்துத் தான் நாப் கின்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து விவாதிக்க வேண்டும்.

தொடரும் சவால்கள்

அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப் பவர்கள், தற்போது தயாரிக் கப்படும் சானிட்டரி நாப்கி ன்கள் சுற்றுச் சூழலுக்கு எதிரா னவை என்றும் அவற்றை அப்புறப் படுத்துவது சவா லானது என்றும் சொல்லி வருகி றார்கள். 

மருத்துவக் கழிவு களில் ஒன்றாக எரிப்பதா அல்லது திடக் கழிவாக அகற்று வதா எனத் தெளி வான 

விதி முறைகள் வகுக்கப் படாத தால் குழப் பங்கள் தொடர் கின்றன. ஒரு பெண் தன் வாழ் நாளில் 125 கிலோ நாப்கின் களை பயன் படுத்த வேண்டியி ருக்கிறது.

நாப்கின் களில் சேர்க்கப் படும் ரசாயனப் பொருட் களின் அளவு அதிகரித்து வருவது பெண் களின் உடலுக்கு ஊறு விளை விப்பதோடு, பல சூழல்சார் சவால் களையும் உருவாக்கி யுள்ளன. 

இதைக் காரண மாக்கி நீரால் சுத்தம் செய்து உலர்த்தி மீண்டும் உபயோ கிக்கக் கூடியவை குறித்தும், 

அவற்றின் உற்பத்தி குறித்தும் விவாத ங்கள் தொடங்கின. ஆனால் அவற்றின் நடை முறைச் சிக்கல் களால் வரவேற்பை இழந்தன. 

இதற்கு முன்பாக அரசு சார்பில் அமலான நடவடி க்கைகள் பலதும் நடை முறைச் சிக்கல் கள் காரண மாக கைவிடப் பட்டுள்ளன.

ஐந்து ஆண்டு களுக்கு முன்னர் மத்திய குடும்ப நல அமைச் சகம் சார்பில் கிராமப் புறத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப் போருக்கு 

ஆறு பேடுகள் ஒரு ரூபாய் விலை யிலும், மற்றவர் களுக்கு 6 ரூபாய் விலை யிலும் வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டது. 

இரண்டு ஆண்டுகள் முன்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டெல்லி யில் உள்ள மகளிர் விடுதி களுக்கு நவீன எரிக்கும் கருவிகள் வழங்கப் பட்டன. 

தமிழக த்தில் கூட இதே நோக்கில் பள்ளி களுக்கு என தனி அடுப்புகள் வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டது. 

ஆனால் இவை நடப்பில் எந்தவொரு மாற்ற த்தையும் ஏற்படுத் தாது கிடப்பில் கிடக்கி ன்றன.

வரி விலக்கில் சர்வதேச விழிப்புணர்வு

தங்களின் மாதாந்திர சுகாதார உபகரணங் களுக்கு வரி விலக்கு கோரு வதைச் சர்வதேச அளவில் பெண்கள் தங்களது உரிமை யாகப் பெற தொடர்ந்து போராடி வருகின்றனர். 

உலகிற்கே முன் மாதிரியாக முழு வரிவில க்கினை முதலில் அறிவித்த பெருமையை தட்டிச் சென்றது வளரும் நாடான கென்யா. இந்த வரிசையில் அயர்லாந்து அடுத் ததாக இடம் பிடித்தது. 

கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடான ஸ்லோ வாக்கியா போன்றவை சுகாதார உபகரண ங்களுக்கு வரிச் சலுகை அறிவித்தன.

அமெரிக்கா வில் மாகா ணங்கள் வாரியாக வரி விலக்கு மற்றும் சலுகைகள் அமலில் உள்ளன. மேலும் பல நாடு களில் விவா தங்கள், கோரிக் கைகள் வலுப் பெற்று ள்ளன. 

இந்த வரிசையில் தற்போது ஜிஎஸ்டியை முன்னி றுத்தி இந்தியா வும் வந்திரு க்கிறது. 

பெண்கள் குரலுக்குச் செவிமெடு க்கும் வித மாகத் தற்போதைய வரி விதிப்பை 12 சதவீதத் திலிருந்து குறைந்த பட்ச வரிவிதிப் பான 5-சதவீத மாக மத்திய அரசு குறைக் கலாம்; 

அல்லது முழு வரிவிலக் கினை அறிவிக் கலாம். இந்த விவாத ங்கள் மூலமாக பெண்கள் அனைவ ருக்கு மான சுகாதாரம் உறுதி செய்யப் படுவது அவசியம்.
Tags:
Privacy and cookie settings