ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யகோரி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் அப்பகுதி பெண்கள்
மற்றும் பொதுமக்கள் 2வது கட்டமாக தொடர்ந்து பல்வேறு வகை நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நடந்த போராட்டத்தில் மக்கள் வாழை இலையை தரையில் விரித்து அதில் மண்ணை வைத்து மண் சோறு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி பெண்கள் கூறுகையில், சோலை வனமாக உள்ள எங்கள் பகுதியை பாலை வனமாக்கத் தான் இந்த திட்ட த்தை மத்திய, மாநில அரசுகள் எங்கள் பகுதியில் செயல்படுத்த பார்க்கின்றனர்.
இத்திட்ட த்தால் விவசாயம் அழிந்து விடும்.நாங்கள் மண்ணை தின்பதை தவிர வேறு வழியில்லை என்பதை அரசுக்கு உணர்த்தும் விதமாக மண் சோறும் சாப்பிடும் போராட் டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
இன்று 119 வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது. இதில் திரளான பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.