சாமியார் ஆசிரமத்திலிருந்து சிறுமிகள் மீட்பு !

பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தலைமை ஆசிரம த்தில் இருந்து 18 சிறுமிகள், இளம் பெண்கள் மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
சாமியார் ஆசிரமத்திலிருந்து சிறுமிகள் மீட்பு !

பெண் சீடர்கள் பாலியல் பலாத் காரம் செய்யப் பட்ட வழக்கில் 'தேரா சச்சா சவுதா' அமை ப்பின் தலைவர் சமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண் டுகள் 


கடுங் காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங் கியது. இதனை யடுத்து அவர் சிறை யில் அடைக்கப் பட்டார்.

தேரா அமைப் பின் தலை மையகம் சிர்சாவில் 1000 ஏக்கர் பரப்ப ளவில் செயல் பட்டு வரு கிறது. 

தலைமை ஆசிரமத்தில் தான் இளம் பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப் பட்டனர். அங்கு தற்போது போலீஸ் பாது காப்பு பலப் படுத்தப் பட்டு உள்ளது.


வன் முறையை அடுத்து, ஹரியா னாவில் ராணுவம் குவிக்கப் பட்ட தால் தலைமை ஆசிரம த்தில் இருந்து சாமி யாரின் ஆதரவா ளர்கள் வெளியேறி வருகி றார்கள். 

இந்நிலை யில் மாவட்ட நிர்வாகம் தலைமை ஆசிரம த்தில் இருந்து 18 சிறு மிகள், இளம் பெண் களை மீட்டு உள்ளது என்றும் 

அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்னும் 3000 ஆதரவாளர்கள் அதே ஆசிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 



தொட ர்ந்து சாமியாரின் ஆதரவாளர்கள் வெளியேறியும் வருகிறார்கள். மற்ற இடங்களிலுள்ள ஆசிர மங்கள் சீல் வைக்கப் பட்டு விட்டன. 

ஆனால் தலைமை யகத்திற்கு இன்னும் சீல் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings