அந்த நாட்டின் அதிபர் அஷரப்கனி இந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ் தானில் சர் இ புல் மாகாணத்தில், மிர்சா வாலங் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் உள்ளூர் போலீஸ் படை யினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அங்கே பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த பயங்கர வாதிகள், போலீசார் மீது தாக்குதல் நடத்தி அவர்களை நிலை குலையச் செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அங்குள்ள கிராமத் திற்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் ஷியா பிரிவினரை குறி வைத்து தாக்குதல் தொடுத்தனர்.
பெண்கள், குழந்தைகள் என யாரையும் அவர்கள் விட்டு வைக்க வில்லை. துப்பாக்கி களால் சுட்டும், வாள்க ளால் தலையைத் துண்டி த்தும் கதறக் கதற படுகொலை செய்தனர்.
இந்த தாக்குதல்களில் போலீசார், பாதுகாப்பு படையினர், அப்பாவி மக்கள் என 50 பேர் கொன்று குவிக்கப் பட்ட தாக அங்கி ருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த கொடூர தாக்கு தலுக்கு ஆப்கானிஸ் தான் அதிபர் அஷரப் கனி கடும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர், கிரிமினல் பயங்கர வாதிகள் மறு படியும் அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தை களை கொன்று குவித் துள்ளனர்.
இது மனித உரிமைகள் மீதான நேரடி தாக்குதல் ஆகும். இது போர்க் குற்றமும் ஆகும் என கூறினார்.
ஆப்கானி ஸ்தான் நிர்வாகி அப்துல் லாவும், இந்த தாக்கு தலுக்கு தனது கண்ட னத்தை தெரிவித் துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘சர் இ புல் மாகாணத்தில், சயத் மாவட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
இது மனித நேயமற்றது. காட்டு மிராண்டித் தனமானது’ என்று குறிப் பிட்டார்.