சபரி மலையில் விமான நிலையம் அமைப்பதற்கு உண்டான சாத்தியக் கூறுகளை ஆராய, விமான நிலைய கட்டுமான ஆலோசனை நிறுவன ங்களுக்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதனை கேரள மாநில சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவி த்துள்ளார்.
புகழ் பெற்ற சபரி மலை ஐயப்பன் கோவி லுக்கு வருடந் தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் சென்று வருகி ன்றனர்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் - ஜனவரி வரை யிலான காலக் கட்ட த்தில் போக்கு வரத்து நெரிசல் அதிகம் ஏற்படு கிறது.
இதனை சமாளி க்கும் வகையில் சபரி மலையில் விமான நிலையம் அமைக்க வேண் டும் என்ற கோரிக்கை நீண்ட கால மாக எழுப்பப் பட்டு வருகிறது.
இதனை யடுத்து அரண் முலா என்ற பகுதியில் விமான நிலையம் அமைக்க கடந்த ஆண்டு திட்ட மிடப் பட்டது.
ஆனால் வனப் பகுதியில் விமான நிலையம் அமைக்க, சுற்றுச் சூழல் ஆர்வ லர்கள் கடும் எதிர்ப்பு தெரிவி த்தனர். இதை யடுத்து வேறு இட த்தை தேர்வு செய்ய குழு ஒன்று அமைக்கப் பட்டது.
தற்போது அந்த குழு இதற்காக சபரி மலை யில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள செருவெள்ளி என்ற பகுதியை தேர்வு செய் துள்ளது.
இது பற்றி சம்பந்தப் பட்ட துறை களுடன் விவா தித்து, விரை வில் இறுதி முடி வெடுக்கப் படும் என பினராயி விஜயன் கூறி யுள்ளார்.
செருவெள்ளி யில் 2,263 ஏக்கர் பரப்ப ளவில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு திட்ட மிட்டுள்ளது. ஆனால் அந்நிலம் தொடர் பாக வழக்கு நடை பெற்று வருகிறது.
திட்டத் திற்கான நில கையகப் படுத்தும் வேலையை அரசு இன்னும் துவக்க வில்லை. எனினும் குறிப் பிட்ட நிலம் அரசின் வருவாய்
ஆவணங் களின் படி அரசு டையது என பினராயி விஜயன் குறிப்பிட் டுள்ளார். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு களை ஏற்படுத் தாத வகை யில் விமான நிலைய த்தை
அமை க்கும் சாத்தியக் கூறுகள் குறித்து அறிவ தற்கு, விமான நிலைய கட்டு மான ஆலோ சனை நிறுவன த்தை கேரள அரசு தேடி வருகிறது.
இந்த பணியை கேரள மாநில தொழில் முன்னே ற்றக் கழகம் மேற் கொண்டு வரு கிறது. இத்தக வலை அம்மாநில முதல்வர் கூறி யுள்ளார்.