தீவிரவாத த்துக்குத் துணை புரிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கத்தார், வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டது.
சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாரு டனான தங்கள் தூதரக உறவுகள் அனை த்தையும் முறித்தன.
வான் வழியி லும், கடல் வழியிலும் கத்தார் விமான ங்கள், கப்பல் கள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டது.
மேலும், கத்தார் தூதர் களையும் நாடு திரும்ப உத்தர விடப் பட்டது. இதை யடுத்து, கத்தாரு க்கு சில நிபந்த னைகள் விதித்து
அதற்கு ஒப்புக் கொண்டால் தடை விலக்கப் படும் என சவுதி அரேபியா அறி வித்த போது அதற்கு கத்தார் மறுப்பு தெரிவித்து விட்டது.
இதைத் தொடர்ந்து, அரபு நாடு களின் நடவடிக் கையால் கத்தார் மிகவும் பாதிக்கப் பட்ட தாகக் கூறப் படுகிறது.
வணிக, வர்த்தக மற்றும் தூதரக உறவு முறிக் கப்பட்ட தால் கத்தார் நிறுவன ங்கள், மாண வர்கள் எனப் பலரும் இத னால் பாதிக்கப் பட்டுள்ள தாக கத்தார் குற்றம் சுமத்தி வரு கிறது.