முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு 420 என்று கூறியதில் எனக்கு பயமில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
எங்களால் முதலமைச்சராக ஆக்கப் பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவர் முதல்வரானது ஒரு விபத்து. விபத்தின் காரணமாக அவர் பதவியில் அமர்ந்தி ருக்கிறார்.
பொய்யான தீர்மானத்தை வெளியிடுவதை தான் 420 என்று கூறினேன். மோசடி செயலுக்கு 420 என்று பெயர் என்று தான் குறிப்பிட்டேன். முதலமைச்சரை 420 என கூறுவதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை,
ஏற்றி விட்ட ஏணியை மிதிப்பவர்கள். இவர்களை இன்று முதலமைச்சராக, அமைச்சராக, மீண்டும் தொடர்வதற்கு காரணமாக இருந்த கழகப் பொதுச் செயலாளர் படத்தையே,
பேனரையே தலைமை கழகத்தில் இருந்து அகற்றும் அளவுக்கு சென்ற இந்த மனிதர்களின் பாகுபாடுகள் எல்லாவ ற்றையும் நான் அறிவேன்.
பதவி இருக்கும் காரணத் தினால் இவர்கள் இன்று இவ்வளவு ஆட்டம் போடுகி றார்கள். நிச்சயம் அவர்கள் திருந்து வார்கள் அல்லது திருத்தப் படுவார்கள்.
தவறு செய்பவர்கள் அனைவரும் திருத்தப் படுவார்கள். எப்போது தேவையோ அப்போது அறுவை சிகிச்சை செய்வோம்.
நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் சசிகலா மேற் பார்வையில் இருந்தது. இன்று அது எங்கள் உறவினர் விவேக் மேற்பார்வையில் இருக்கிறது.
அதில் நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட சில கருப்பு ஆடுகளை அவர் அந்த பதவியில் இருந்து எடுத்து விட்டார்.
நிச்சயம் சின்னத்தை நாங்கள் பெறுவோம். அதிமுகவை ஒன்று படுத்துவோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் இரட்டை இலை சின்னத்தில் இயக்க வேட்பாளர்கள் போட்டி யிடுவார்கள்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார்கள். அது போல் சில செயல்பாடுகள் இருக்கும்.
தறி கெட்டு திரிகிறார்கள் அவர்களுக்கு மூக்கனாங்கையிறு போடும் இடத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.