தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நான் 1996-ம் வருடம் சென்னை க்கு வந்தேன். சினிமா வில் வாய்ப்பு தேடினேன். முதலில் படுத்து தூங்கு வதற்கு ஒரு இடம் தேவை என்பதை உணர் ந்தேன்.
அதற்காக சினிமா ஆர்ட் டிபார்ட்மென்டில் கூலி வேலைக்கு சேர்ந்தேன். அதன் மூலம் சென்னையில் தங்கியிருப்ப தற்கான வாய்ப்பை தேடிக் கொண்டேன்.
ஆர்ட் டிபார்ட் மென்டில் வேலை இல்லை என்றால், கூலி வேலைக்கு போய் விடுவேன். அல்லது பெயிண்டராக மாறி விடுவேன்.
சூரி இருந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும் என்று என்னுடன் வேலை செய் தவர்கள் சொல்வார்கள். வேலை செய்து கொண்டே மற்றவர்களை சிரிக்க வைப்பேன்.
முதலில் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சென்னை கே.கே.நகரில் உள்ள சிவன் பார்க்கில் தான் ஒத்திகை பார்ப்போம். ஒரு நாடகத்தில் நான் வீரப்பனாக நடித்தேன். அதற்காக ரூ.400 சம்பளமாக கொடுத்தார்கள்.
சினிமாவில் நான் தலை காட்டிய முதல் படம், ‘ஜி’. முதல் படத்திலேயே அஜித் குமார் பாராட்டும் படி, நடித்து விட்டேன்.
அடுத்து நான் நடித்த படம் ‘காதல்’. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் இடம் பெற்ற ‘புரோட்டா சீன்’ தான் என்னை பிரபல மாக்கியது. எல்லோருக்கும் தெரிய வைத்தது. இவ்வாறு சூரி கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சூரி அளித்த பதில் களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் கதா நாயகனாக நடிக்க ஆசைப் படுவதாக கேள்வி ப்பட்டோமே... அது உண்மயா?
பதில்:- இந்த வினாடி வரை அப்படி ஒரு எண்ணம் எனக்குள் தோன்ற வில்லை.
கேள்வி:- எந்த கதா நாயகியுடன் உங்களுக்கு டூயட் பாட ஆசை?
பதில்:- வாய்ப்பு கிடைத் தால் நயன்தாரா உள்பட எல்லா கதா நாயகிகளுடனும் டூயட் பாட ஆசை. இதற்கு அவர்களுக்கும் ஆசை இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லை என்றால் உள்ளே (சிறைக்குள்) தள்ளி விடுவார்கள்.
கேள்வி:- உங்களுக்கு பிடித்த நகைச் சுவை நடிகர்கள் யார்?
பதில்:- சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு, வி.கே. ராமசாமி இவர் களுடன் என் தந்தை யும் ஒருவர். எனது அப்பா மிகச்சிறந்த நகைச் சுவை ரசிகர்.
அவர் சொல்லிக் கொடுத்த படி தான் நடித்துக் கொண்டு இருக்கிறேன். மேற்கண்ட வாறு சூரி பதில் அளித்தார்.