வி.வி.டி தேங்காய் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக நடிகை காஜல் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2008-2009ம் ஆண்டுக்கு மட்டுமே தான் நடித்த விளம்பரப் படத்தை பயன்படுத்த வி.வி.டி ஒப்பந்தம் செய்தது.
ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் தான் நடித்த விளம்பர படத்தை வி.வி.டி பயன் படுத்துவதாக காஜல் புகார் அளி த்தார்.
தனது படத்தை பயன்படுத்திய வி.வி.டி நிறுவனம் ரூ.2.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று காஜல் மனு அளித்திருந்தார்.
காப்பு ரிமை சட்டப்படி விளம் பரத்தை பதிவு செய்து உள்ளதாக வி.வி.டி நிறுவனம் ஐகோர்ட்டில் பதில் அளித்தது.
காப்புரிமை சட்டப்படி 60 ஆண்டுகள் விளம்பரத்தை பயன்படுத்த உரிமை உள்ளதாக வி.வி.டி நிறுவனம் தெரிவித்தது. வி.வி.டி நிறுவனத்தின் விளக்கத்தை அடுத்து காஜல் மனுவை நீதிபதி ரவிச்சந்திரன் தள்ளுபடி செய்தார்.