தூசு என்பது காற்றினால் கடத்திச் செல்லப்படும் புவியின் மிக நுண்ணிய துகள்கள். நுண்பெருக்கி மூலம் பார்க்கக் கூடிய அளவிலிருந்து மணல் துகளின் அளவு வரைக்கும் இருக்கலாம்.
உலர் மண்ணின் சிறு துகள்கள், சாம்பல், கார்பன் மற்றும் தொழிற் சாலைகளின் மாசுக்கள்,
எரிமலைக் குமுறலினால் வெளிப்படும் துகள்கள், விண்வெளியில் இருந்து புவிக்குள் விழும் துகள்கள்... இவை யெல்லாமே தூசுக்கள் தான்.
சமயங்களில் கடறகரை காற்றில் உப்புத் துகள்களும், அணுக்கரு வெடிப்பில் நிகழும் கதிரியக்கப் பொருள்களும்,
தாவரங்களின் மகரந் தங்களும் கூட தூசுகளாக இருக்கலாம். நம் உடலின் இறந்த திசுக்களும் தூசுகளாக உதிரும்.
தூசுகளின் விளைவுகள்.
தூசுகள் ஒன்றும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவ தில்லை. மழை மேகங்கள் உருவாகிட தூசுகள் வேண்டும்.
பனிப் பொழிவு களுக்கும் தூசுகள் வேண்டும். சூரிய ஒளியை வடி கட்டுவ திலும், வானிற்கு (நீல) நிறம் கொடுப்ப திலும் தூசியின் பங்கு உண்டு.
சூரியக் கதிர்க ளில் சில வற்றை மேல் நோக்கித் திருப்பி விட்டு புவியின் வெப்ப நிலையைக் கட்டு க்குள் வைத்தி டவும் தூசுகள் பங் காற்று கின்றன.
தூசுகள் உயிர் தாதுக் களுடன் சேர்ந்து மண்ணின் மேற் பரப்பை உரு வாக்கு கின்றன. தாவர ங்கள் வள ர்ந்திட அது மிக அவசிய மாகும். இந்த தூசுகளே ஈரப்பதம், வெப்பம் மற்றும் காற்றி னைப் பிடித்து வைத்துக் கொள் கின்றன.
தாவரங் களின் மகரந் தங்கள், சிறு பூச்சி யான Dust mite போன்ற வற்றைக் கொண்ட தூசுகள் சில மனி தர்க்கு பாதிப்பு களை ஏற் படுத்த லாம்.