கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொளு வானி பகுதியை சேர்ந்தவர் ஹனீஸ் (30). பெங்க ளூரில் சாப்ட்வேர் இன்ஜி னியராக பணி யாற்று கிறார்.
இவரது மனைவி லீனா ஜோஸ்னா (30). இவர்க ளுக்கு 4 வயதில் ஒரு மகனும், அபின் என்ற ஒன் றரை வயது மகனும் உள்ளனர்.
விடு முறையை யொட்டி கேரள மாநில த்தில் உள்ள சொந்த ஊருக்கு குடும்ப த்துடன் சென் றிருந்த ஹனீஸ், நேற்று இரவு அங்கி ருந்து பெங்களூ ருக்கு காரில் புறப் பட்டார்.
காரில் ஹனீஸ், லீனா மற்றும் குழந்தை களுடன், ஜார்ஜ் (36) என்ப வரும் வந்து ள்ளார்.
தர்மபுரி & சேலம் தேசிய நெடுஞ் சாலையில் தொப்பூர் அருகே மேம் பாலத்தில் இன்று காலை 6.45 மணி அளவில் கார் வேக மாக சென்று கொண்டி ருந்தது.
அப்போது திடீரென கட்டுப் பாட்டை இழந்த கார் மேம் பாலத் தில் இருந்து பறந்து சென்று கீழே விழுந்தது.
மேம் பாலத்தின் தூணில் கார் மோதி நொறுங்கி யதில் காரில் இருந்த ஜார்ஜ், ஒன்றரை வயது குழந்தை அபின் ஆ கியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாப மாக இறந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி ஹனீஸ், லீனா ஜோஸ்னா மற்றும் 4 வயது மகன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அந்த வழி யாக வாகன ங்களில் சென்ற வர்கள் தொப்பூர் போலீசு க்கு தகவல் கொடுத் தனர்.
தீவட்டிப்ப ட்டி செக் போஸ்ட் போலீ சார் சென்று படுகாயம் அடைந்து உயிரு க்கு போரா டிய ஹனீஸ், லீனா ஆகி யோரை மீட்டு தர்மபுரி அரசு மருத்து வமனை க்கு அனுப் பினர்.
அங்கு அனு மதிக்கப் பட்ட சிறிது நேர த்தில் சிகிச்சை பலனி ன்றி லீனா பரிதா பமாக இறந்தார். ஹனீசு க்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
அவரிடம் இருந்த செல் போனை எடுத்து அதில் இருந்த எண்களில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்து வருகி ன்றனர்.
விபத்தில் பலத்த காயம் அடைந்த 4 வயது மகன் சேலம் தனியார் மருத்துவ மனை யில் சிகி ச்சை பெற்று வரு கிறான். விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வி சாரித்து வரு கின்றனர்.