விபத்து அல்லது வியாதியால் ரத்தம் இழந்தவருக்கு ரத்தம் ஏற்றிக் காப்பாற்றுவது இன்று சாதாரண வழக்கமாக உள்ளது. இந்த நடை முறை, பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.
ஆனால் அப்போ தெல்லாம் ரத்தம் ஏற்றுவதால் சில சமயங்களில் நன்மை விளைந்தது, சில சமயங்களில் தீமை ஏற்பட்டது.
விஞ்ஞானிகளுக்கு அது புதிராக இருந்தது. அதன் பின்பே, எல்லா மனித ரத்த மும் ஒரே தன்மை உடையதல்ல என்று விஞ்ஞானிகள் உணர் ந்தனர்.
ரத்தம் ஏற்ற வேண்டு மென்றால் ரத்தத்தைச் சேமிக்க வேண்டும். ஆனால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் ரத்தம் உடனே உறைந்து விடுகிறது.
1914-ல் தான் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயனப் பொருளை ரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் அதன் உறைவைத் தடுக்க முடியும் என்று கண்டு பிடித்தார்கள்.
ஆனால் நீண்ட காலத் துக்கு ரத்த த்தைச் சேமித்து வைப்பது எப்படி? ரத்த த்தில் மிதக்கும் செல்கள் சீக்கிர த்தில் இறந்து விடு வதைத் தடுப்பது எப்படி?
நிழல் நிறம் கருப்பு ஏன்?
1932-ல் இதற்கு சோவியத் மருத்து வர்கள் வழி கண்டனர். குளி ரூட்டும் பெட்டி யில் ரத்த த்தைப் பாது காத்தால், அந்த செல்களை அழி யாமல் காக்க லாம் என்று கண்டு பிடித்தனர்.
அதன் பிறகு ரத்தச் சேமிப்பு நிலை யங்கள் என்ற ரத்த வங்கி களை அமைத்து மக்க ளிடம் இருந்து ரத்த தானம் பெறும் வழக் கத்தை ரஷியர்கள் தொடங் கினர். அது உலகெ ங்கும் பரவியது.
1936-ம் ஆண்டு ஸ்பெயி னில் பிராங்கே கலகக் கூட்ட த்துக்கு எதிராக குடியரசுப் போரா ட்டம் நடந்த போது டாக்டர் நார்மன் பிதின்,
ரத்தச் சேமிப்பு முறை யைப் பயன் படுத்தி போர்க் களத்தில் பல வீரர்க ளுக்கு மறு உயிர் கொடு த்தார்.
பிதின் கனடா நாட்டு காரர். அவர் சோவியத் யூனி யனின் ரத்தச் சேமிப்பு ஏற்பாடு களைக் கற்ற றிந்திரு ந்தார். இறுதி யாக அமெரிக்க மருத்து வர்கள் பிளாஸ்மா தயாரி ப்பில் வெற்றி கண்டனர்.
மிதக்கும் அணு க்கள் உள்ளிட்ட முழுமை யான ரத்தம் தேவைப் படாத நோயாளி களுக்கு பிளாஸ்மா கொடுக்க லாம். பிளாஸ் மாவைச் சேமித்துப் பாது காப்பதும், நோயா ளிக்குக் கொடு ப்பதும் எளிது.
சன் கிளாஸ் தேர்வு செய்வது !
மேலும் ரத்த த்தில் பிரிவுகள் இருப் பதைப் போல பிளாஸ்மா வில் இல்லை. யாருடைய பிளாஸ் மாவை யும் எவரு க்கும் கொடுக்க லாம்.