இறைவனின் அற்புத செயல்களில் இப்பூமியில் மழை பெய்வித்தலும் ஒன்று. மழை எப்படி உருவாகிறது? என்ற கேள்விக்கு இதுவரை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து பதில் சொல்ல முடியவில்லை.
தற்போதுள்ள அறிவியல் விளக்கங்கள் அனுமானங்களால் உருவானவை. கருமேகங்களைக் காண்கிறோம், மழை பொழியும் என்று கூறுகிறோம்,
கடல் சூடாகி மேகமாகி குளிர்வதனால் மழை பெய்கிறது என்றும் பூமியின் மேற்பரப்பில் உருவாகும் தட்ப வெப்ப வேறுபாடுகளினால் மழை பெய்கிறது என்றும்,
மழை பெய்தால் தான் உயிர்கள் வாழ முடியும், அதனால் மழை பெய்கிறது என்றும் பல வழிகளை நாம் சொல்கிறோம்.
மேலும் அறிவியல் முறைப்படியான இதற்கான விளக்கங்கள் பல்வகைப்பட்டது. அதனையும் காண்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளிலிருந்த நீரானது திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று மேகங்களாக உருமாறுகின்றன.
பிறகு மீண்டும் அங்கிருந்து வெப்பத்தினால் நீராவியாகி மேகமாகி மழையாகின்றன.
இப்படி தொடர்ச்சியாக நடைபெறுவதை நீர் சுழற்சி (The Water Cycle) என்கிறோம். இதனையே இன்னும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்,
நீராவியானது குளிர்ந்து பனிமூட்டமாக மாறுவதே மேகங்களாகும். மார்கழியில் காலைப்பனி நிலத்தை மூடுவதைப் போல, ஆகாயத்தில் அதே பனி மூட்டம் தான் வெண்மேகமாக நமக்குத் தெரிகிறது.
கடல், ஆறு, குளம் ஆகியவற்றிலிருந்து ஆவியாகிக் கிளம்பும் நீராவி மேலே எழும்பி குளிர்வான ஆகாய மேல்புறத்தை அடைந்ததும் வெண் மூட்டமாக படர்ந்து விடுகிறது.
மலை முகடுகளில் குளிர்ச்சியும், காடுகளிலிருந்து புறப்படும் ஈரமும் மேகமாகி கவிந்து மஞ்சு போர்த்திய மலை முகடாகக்காட்சி அளிக்கிறது.
வெண்மேகம் மேலும் மேலும் குளிர்ந்து விட்டால் அதிக அடர்வாகி கருமேகமாக மாறி விடுகிறது.
மேலும் குளிர்வதால் ஆவி நிலையை இழந்து திரவ நிலையை அடைந்து மழையாகப் பொழிகிறது.
மேற்காணும் இரண்டு அனுமானங்களிலிருந்து மழை எவ்வாறு பெய்கிறது என்பதை அறிவியல் நமக்கு விளக்கியுள்ளது.
தற்போது செயற்கையாகவே மழை பெய்விக்கும் விஞ்ஞானம் வந்து விட்டது.
ஆனால் இது எப்படி என்றால், கருவில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்தில் பிறக்க வைப்பது போன்றது தான்.