ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் என்ற இலவச மொபைலை எந்த கட்டணமும் இல்லாமலேயே முன் பதிவு செய்யலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் என்ற புதிய பேசிக் மொபைலை அறி முகம் செய்துள்ளது. ஆனால், வழக்கமான பேசிக் மொபைல்கள் போல இல்லாமல் குரல் மூலம் இயக்கும் வசதி, எமர்ஜென்சி கால் வசதி போன்ற வையும் உள்ளன.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்தியா விலேயே தயாரிக்கப்பட்ட மொபைல் ஆகும்.
இந்த மொபைல் ரூ.0 விலையில், அதாவது இலவசமாக, கிடைக்கும் என்றும் வைப்புத் தொகை யாக ரூ.1500 முதலில் செலுத்தி விட்டு
மூன்று ஆண்டு களுக்குப் பின் மொபைலை திருப்பிக் கொடுத்து முழு தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மொபைல் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன்பாக, இந்த மொபைலை புக் செய்ய முடியும். முன்பதிவு வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்குகிறது.
ஜியோ கடைகளில் நேரில் சென்றும் புக் செய்யலாம். அல்லது மொபைல் போனில் மை ஜியோ அப்ளிகேஷன் வாயிலாகவும் புக் செய்யலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.