ஐ.டி. வேலையை உதறி டீக்கடைநடத்தும் மனிதர் !

கல்லூரிப் பருவத்தில் தியேட்டர், பார்க் என்று நண்பர்களோடு சுற்றிக் கொண்டிருந்தால், நீயெல்லாம் படிச்சு உருப்படியான வேலைக்குப் போகப் போறதில்லே, 
ஐ.டி. வேலையை உதறி டீக்கடைநடத்தும் மனிதர் !
பெட்டிக் கடையிலோ, டீ கடையிலோ எடுபிடியா இருக்கப்போறே என்று பெற்றோரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படும். 

ஆனால், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முடித்து, ஐ.டியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், 
அதை உதறி விட்டு பெற்றோர் மற்றும் காதல் மனைவியின் உதவியோடு டீ கடை நடத்தி வருகிறார் என்று சொன் னால் நம்புவீர்களா?

ஐ.டி இளைஞர் சுரேஷ்

சென்னை, விருகம் பாக்கத்தில் இருக்கும் சாய்கிங் டீ ஷாப்பில், சாரல் விழும் மாலை நேரத்தில், சூடான டீயைக் கொடுத்து விட்டுப் பேசுகிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன். பிரதர், என் சொந்த ஊர், பொள்ளாச்சி. 

பிறந்தது வளர்ந்தது அங்கே தான். அப்பா அம்மா ரெண்டுப் பேருமே படிக்காதவங்க. ஆனால், என் படிப்பில் ரொம்ப அக்கறை எடுத்து எல்லாம் செஞ்சாங்க. 
நான் 2006-ம் வருஷம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடிச்சுட்டு சென்னையிலுள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். 

நல்ல சம்பளம் தானாலும், மனசுக்குள்ளே ஏதோ ஒரு குறை உறுத்திட்டே இருந்துச்சு. அதனால் வேலையை விட்டுட்டு நண்பரோடு சேர்ந்து ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சேன். 

அது அஞ்சு வருஷம் நடந் துச்சு. பிறகு, தனியா ஏதாவது செய்ய லாமேன்னு யோசிச்சு இந்த டீ ஷாப் வெச்சேன்” என்கிறார்.

ஒரு வருடத் துக்குள் விருகம் பாக்கம், ஓ.எம்.ஆர் மற்றும் முகப்பேர் என மூன்று இடங் களில் டீ ஷாப் வைத்து உற்சாக மாகச் சுழன்று வரு கிறார். 
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் னாலும் ஒரு பெண் இருப்பார் என் பார்கள். சுரேஷின் வெற்றிக்குப் பின்னால், அம்மா வசந்தி மற்றும் மனைவி சங்கீதா இருக்கிறார்கள்.

என் பையன் சின்ன வயசிலிருந்தே அவன் அப்பாவின் சொந்த பிசினஸில் உதவியா இருந்திருக்கான். அதனால், சொந்த வேலை செய்யும் ஆசை எப் பவும் இருந்திருக்கு. 
ஆனால், டீ கடை வைக்கப் போறேன்னு சொன்னதும், சொந்தக்காரங்களை நினைச்சுத் தான் பயந்தேன். உங்க பையன் ஐ.டி வேலையை விட்டுட்டு பிஸினஸ்னு போனான். 

இப்போ, அதையும் விட்டுட்டு என்ன செய்யறான்? னு கேட்டால், டீ கடை வைக்கப் போறான்னு எப்படிச் சொல்றதுன்னு ஒரே தவிப்பா இருந்துச்சு. 

அந்தச் சமயத்தில் என் கிட்டே பேசி நம்பிக்கை கொடுத்தது என் மருமகள் தான். லட்சம் லட்சமா சம்பா திச்சு என்ன பிர யோஜனம் அத்தை? மனசுக்குப் பிடிச்ச வேலையைச் செஞ்சுட்டு சந்தோஷமா 

வீட்டுக்கு வர்றது தானே முக்கியம்’ னு சொல்லிப் புரிய வைச்சா. அப்புறம், நானும் அவனை ஊக்கப் படுத்தி டீ கடை வைக்க உதவி செஞ்சேன். 

ஐ.டி. வேலையில் கை நிறையச் சம்பளத்தோடு இருந்ததை விட, இப்போ ஆக்ட்டிவ்வா இருக்கான். 
பிள்ளையின் சிரிச்ச முகத்தைப் பார்க்கிறதை விட ஒரு தாய்க்கு பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கு? என்று நெகிழ்கிறார் வசந்தி.

சுரேஷ் ராதா கிருஷ்ணன்-சங்கீதா
சுரேஷின் காதல் மனைவி சங்கீதா, நாங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கி றப்பலேருந்து நல்ல ஃப்ரெண்ட்ஸ். 

அந்த நட்பு காதலாச்சு. எந்த ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடியும் ரெண்டுப் பேரும் மனசு விட்டுப் பேசுவோம். 

அப்படித் தான், 'வேலையை விடப்போறேன்'னு அவர் என்கிட்ட சொன்னப்ப, அங்கே நான் ஒரு மனை வியாயோசிக்காம. 

ஒரு தோழியா யோசிச்சேன். 'இது தான் உங்களுக்குச் சந்தோஷத்தையும் எனர்ஜியையும் கொடுக்கும். தாராளமா செய்யலாம்'னு சொன்னேன். 
ஐ.டி. வேலையை உதறி டீக்கடைநடத்தும் மனிதர் !
கடையை ஆரம்பிச்சதும், ஆர்டர் கொடுத்திருக்கிற கம்பெனிகளுக்கு பிளாஸ்கில் டீ எடுத்துக் கிட்டு வேக வேகமா கிளம்புவார். 

அதைப் பார்த்த போது, ஆரம்பத்தில் ஒரு மனைவியா கண் கலங்கினேன். ஆனால், எனக்குள் இருக்கும் தோழி, அவரை ஊக்கப் படுத்தணும்னு சொல்லிச்சு. 

ஆரம்பத்தில், டீ ஷாப் ஓனரே'னு கிண்டலடிச்ச சிலர், இப்போ இவரின் வளர்ச்சியைப் பார்த்து வாயடைச்சு நிற்கிறாங்க. ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் கப் டீ வியாபாரம் ஆகுது. 
சென்னையில் இருக்கும் பல கம்பெனிகளுக்கு எங்க ஷாப்பில் இருந்து டீ சப்ளை ஆகுது. 

இப்பவும் 'என்னடி உன் வீட்டுக்காரர் டீ ஷாப் வெச்சிருக்காராமே?' னு தோழிகள் யாராவது கேட்டால், 'ஆமாம்! 

சிங்கத்துக்கு வாலா இருக்குறத விட பூனைக்குத் தலையா இருக்கிறதை நாங்க பெருமையா நினைக்கிறோம்' னு கம்பீரமா சொல்வேன்” எனப் புன்னகைக்கிறார் சங்கீதா. 
இவர்களின் இரண்டரை வயது பெண் குழந்தையான மகிழினி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இன்னொரு பூஸ்ட்டாக இருக்கிறார். 

கணவரைப் புரிந்த மனைவியும், நந்தவனமாகக் குழந்தையும் இருக்கும் போது எல்லோரும் தொழிலதிபர்களே.
Tags:
Privacy and cookie settings