காஷ்மீரில் நடந்த சண்டையில் தமிழக வீரர் பலி !

1 minute read
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் நடந்த சண்டையில் தமிழக வீரர் பலி !
காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஸைனாபோரா அருகே அவ்னீரா கிரா த்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். 

அப்போது பயங்கர வாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தத் தாக்கு தலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா உள்பட இருவர் உயிரிழந்தனர். 

பாது காப்புப் படை யினர் நடத்திய எதிர் தாக்கு தலில் தீவிரவா திகள் 3 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
வீரமரணம் அடைந்த இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி அருகே உள்ள கண்டானி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 

பெரிய சாமி, மீனாட்சி தம்பதியரின் மகனான இளையராஜாவுக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings