லாலு பிரசாத் யாதவ் பிரமாண்ட பொதுக்கூட்டம்... உண்மையா?

பா.ஜ.க - வுக்கு எதிராக பாட்னாவில் 27-ம் தேதி மாலை லாலு பிரசாத் யாதவ் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். 
லாலு பிரசாத் யாதவ் பிரமாண்ட பொதுக்கூட்டம்... உண்மையா?
இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், சமாஜ்வாடி கட்சித் தலை வரும், 

உ.பி - முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தப் பொதுக் கூட்டம் தொடர் பாக தம்முடைய ட்விட்டர் பக்க த்தில் லாலு பிரசாத் ஒரு புகைப் படம் வெளி யிட்டிருந் தார். 

அந்தப் புகைப் படத்தில், பெரு மளவு கூட்டம் இருந்த தாகக் காட்டப் பட்டிருக் கிறது. ஆனால், அது பாட்னா வில் முன்பு நடந்த பா.ஜ.க கூட்ட த்தில் எடுக்கப் பட்ட புகைப் படம் என்று பரபரப்பு எழுந் துள்ளது.

போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப் பட்டு, அதிகக் கூட்டம் இருப்பது போல படம் வெளி யிடப்பட்ட தாக ட்விட்ட ரில் ஏராள மானோர் கருத்துத் தெரிவித் துள்ளனர். 
இதை யடுத்து, https://twitter.com/laluprasadrjd என்ற லாலு வின் ட்விட்டர் தளம் முடக்கி வைக்கப் பட்டிருக் கிறது. 

இன்னொரு புறம், லாலுவைப் பிடிக் காத பா.ஜ.க - வினர், தங்கள் ஆதரவா ளர்களைக் கொண்டு சமூக வலை தளங்க ளில் வேண்டும் என்றே புரளியைக் கிளப்பி விட்டிருப் பதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி யினர் சொல்கி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings