முஸ்லிம்களின் தேச பற்றில் உத்திர பிரதேச அரசு சந்தேகம் எழுப்பி யுள்ளதற்கு உத்திர பிரதேச மதரஸாக்கள் கண்ட னம் தெரிவித்துள்ளன.
உத்தர பிரதேசத்தில் அனைத்து மதரஸாக்களும் சுதந்திரதின விழா கொண்டா டுவதை வீடியோவில் பதிவு செய்ய அம்மாநில பாஜக அரசு உத்தர விட்டுள்ளது.
இதற்கு மதரஸாக்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ள நிலையில், இது தொடர் பாக மாவட்ட மதரஸா நிர்வாகக் கமிட்டி தலைவர் அர்ஷத் நோமானி கூறும் போது, நம் நாட்டு மதரஸாக்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
இவற்றின் உலமாக்களில் பலரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஒவ்வொரு மதரஸாவும் தேசியக் கொடி ஏற்றி கொண் டாடுகின்றன.
மற்ற கல்வி நிறுவன ங்களை போலவே விளை யாடுப் போட்டி கள் நடத்தப் பட்டு, பல்வேறு மாநில உடை களை மாண வர்கள் அணிந்து வரச் செய்வ தன் மூலம் தேசிய ஒற்றுமை வலியு றுத்தப் படுகிறது.
இறுதியில் அனைவ ருக்கும் இனிப்பும் வழங் கப்படு கிறது. இந்நிலை யில் மதரஸாக் களின் தேசப் பற்று மீது சந்தேகப் பார்வை வீசும் வகை யில் உ.பி. அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.
இந்த உத்தரவை அனைத்து கல்வி நிறுவனங் களுக்கும் அளித்திருந்தால் ஏற்றுக் கொள்ளத் தக்கது. ஆனால் மதரஸாக் களுக்கு மட்டும் உத்தர விட்டி ருப்பது வருந்தத் தக்கது.
இத்தனைக்கும் இந்த விழாக்களுக்கு என தனியாக நிதி எதுவும் மாநில அரசு அளிப்ப தில்லை. எனவே இந்த உத்தரவை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.