ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் !

2 minute read
புனித மிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்கு வதால் உலகெங்கி லிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள் தோறும் பெருமளவில் வருகை தந்து கொண்டுள்ளனர். 
ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ மருத்துவ நிபுணர்கள்
இவர்களின் உடல் நலத்தை பேணவும், தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் சுமார் 29,000 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 

நியமனம் செய்யப் பட்டு 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர் என சவுதி சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

புனித ஹஜ் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவருக்கும் கட்டாய மூளைக் காய்ச்சல் 

மற்றும் இன்புளூ யன்ஸா ஜூர தடுப்பூசி போடப் படுவதற்கான நடவடிக்கைகள் முன் னெடுக்கப் பட்டுள்ளன. 
சர்வதேச சுகாதார நிறுவ னத்தின் (WHO) வழி காட்டு தலின்படி இத்தகு நோய் கட்டுப் பாடு மற்றும் தடுப்பு நடவடி க்கைகள் மேற் கொள்ளப் படுகின்றன.
சவுதி யின் அனைத்து விமான நிலை யங்கள், கப்பல் துறை முகங்கள் மற்றும் தரைவழி உள் நுழைவு மையங் களில் உள்ள சுகாதார மையங் களில் 24 மணி நேரமும் 

யாத்ரீகர் களுக்கு தேவை யான மருந் துகள், ஊசிகள் மற்றும் தடுப்பு மருந் துகள் தேவை யான அளவு இருப் புக்கள் வைக்கப் பட்டு ள்ளன.

ஏற்க னவே, யாத்ரீகர் களுக்கள் தாங் களுக்குத் தேவை யான நோய்த் தடுப்பு மருந்து களை எடுத்து கொள்வது சம்மந் தமான வழி காட்டுதல் அந்தந்த நாட்டு சவுதி தூதர கங்கள் மூலம் வழங் கப்பட் டுள்ளன. 

அதன்படி மூளைக் காய்ச் சலுகான ஊசி கட்டாயம் என்றும் இன்புளூ யன்ஸா ஜூர ஊசியை விரும் பினால் போட்டுக் கொள்ள லாம்.
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற் கொள்வதற்காக 25 பெரிய மருத்துவ மனைகளும் 155 ஹஜ் காலத்தில் மட்டும் செயல்படும் 

ஆரம்ப சுகாதார நிலையங்களும் புனிதத் தலங் களான அரபா, மினா, மக்கா, மதீனா மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டி ஆகிய பகுதிகளில் இயங்குகின்றன.
இவற்றில் தீவிர கண்காணிப்பு அலகுகளில் (ICU) உள்ள 500 மற்றும் 550 அவசரகால சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உட்பட 5,000 படுக்கைகள் உள்ளன. 

இவற்றுடன் கூடுத லாக புனித ஹரம் ஷரீஃபில் உள்ள மருத்துவ மனையில் அவசர கால சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
100 சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் புனித நகர்களை சுற்றி வர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.  

இவற்றின் மூலம் அருகிலிருக்கும் மருத்துவ மனையில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கச் செய்ய இயலும் என்றும் சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings