என்னை துணை முதல்வராக வலியுறுத்தினர்... தினகரன் !

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற போது என்னை துணை பொதுச் செயலாள ராகவும், துணை முதல்வராகவும் நியமிக்கச் சொன்னது
என்னை துணை முதல்வராக வலியுறுத்தினர்... தினகரன் !
இதே முதல்வர் பழனி சாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி தான் என்று டிடிவி. தினகரன் தெரிவித் துள்ளார். திருப்பூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள அவர் செய்தியா ளர்களிடம் பேசியதாவது : 

கூவத்தூ ரில் எம்எல்ஏ க்கள் இருந்த போது முதல்வ ராக பழனி சாமியை நியமித்த போது, அவர் அனைவ ரிடமும் கையெ ழுத்து வாங்கச் சொன்னார்.

ஆனால் சசிகலா கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு அனைத்து எம்எல்ஏ க்களும் எடப்பாடி பழனி சாமியை முதல்வராக்க ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் அதற்குப் பிறகு ஏப்ரல் மாதத் தில் திடீரென ஏதோ ஒரு பய த்தில் பின் வாங்கு கிறார்கள். சசிகலா சிறை சென்ற போது முதல்வர் பழனிசாமி, 

தங்கமணி, வேலு மணி உள்ளி ட்டோர் தான் என்னை துணை பொதுச் செயலா ளராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பழனிசாமி முதல் வராக பொறுப் பேற்கும் கடிதத்தை ஆளு நரிடம் கொடுக்கச் சென்ற போது இதே தங்க மணியும், வேலு மணியும் என்னை துணை முதல்வ ராக்க வேண்டும் என்று சொன் னார்கள்.

பதவியாசை இல்லை

பதவி க்கு நான் ஆசைப் படுவதாக இருந் தால் நானே முதல் வராகியி ருப்பேன். ஆனால் கட்சி ஒற்றுமை யாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும் பினோம்.

துணை முதல்வர்?

அமைச் சரவை அமை க்கும் போது நான் துணை முதல் வராக அமைச் சரவையில் இடம் பெற வேண்டும் என்று சொன்ன வர்கள் இவர்கள். 

ஆர்.கே.நகர் இடைத் தேர்த லின் போது நான் வாக்கு சேகரிக்க சென்ற போது எனக்கு அருகில் நின்று வாக்கு கேட்ட வர்கள் இவர்கள்.

சுயநலம்
நான் வீரத்தோடு அதே நேரம் அமைதி யாக இருப்ப வன், பொதுச் செயலாளர் சிறை யில் இருக்கும் நிலையில் அவரை நீக்கு வேன் என்று சொல்வதா என்று எம்எல்ஏ க்கள் கொதித் தெழுந்தனர். 

கட்சியை ஒன்று படுத்து கிறோம் என்கிற பெயரில் சுயநல சிந்தனை யோடு பதவி களை பாதுகாக்க வியாபார உடன் படுக்கை செய்து கொண் டுள்ளனர்.

சசி தலைமை யில்

வேறு வழி யில்லா மல் முதல் வரை மாற்ற வேண்டும் என்று ஆளு நரிடம் கடிதம் கொடுத்து ள்ளனர். எம்எல்ஏ க்கள் பயம் காரண மாக புதுச்சேரி யில் இல்லை, 

கட்சியை காக்க வேண்டும் என்ப தால் தான் அங்கு தங்கி யிருக்கி றார்கள். இவர் களின் பணம் எங்கள் ஆதரவு எம்எல்எ க்களை ஒன்றும் செய்து விடாது

சசிகலா தலைமை யில் கட்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எம்எல்ஏ க்களின் விருப்பம்.

ஆபரேஷன் தொடங்கி யுள்ளது
இது வரை வெளிப் படையாக 21 எம்எல்ஏ க்கள் ஆதரவு தெரிவித் துள்ளனர். கட்சியின் பாதுகாப்புக் காக மேலும் பலர் இருக்கி றார்கள், 

அவர்கள் தான் இந்தக் கட்சி யையும் ஆட்சியையும் காப்பாற்றப் போகி றார்கள். கட்சியை பலப்படுத்துவ தற்கான 

ஆபரேஷன் அறுவை சிகிச்சை சசிகலா ஒத்து ழைப்புடன் தொடங்கி யுள்ளது, என்று தினகரன் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings