தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தி யாளர்களிடம் அக்கட்சியின்
துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், தன்னை முதல் வராக்கிய பொதுச் செயலாளரையே
கட்சியை விட்டு நீக்க முயலும் நபர் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்களுக்கு அவரால் எப்படி நல்ல முதல்வராக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
தன்னை முதல்வ ராக்கிய வர் தற்போது சிறையில் இருக்கிறார் என்பது பற்றி மனதில் சிறிதளவு ஈரமின்றி
பதவி வெறியால் முதல்வர் பதவி யில் எடப்பாடி பழனி சாமி ஒட்டிக் கொண்டிருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம் என்று தினகரன் தெரிவித்தார்.
கடந்த திங்கட் கிழமை யன்று எடப்பாடி தலை மையில் நடந்த நிர்வா கிகள் மற்றும் சட்ட மன்ற, நாடாளு மன்ற உறுப்பி னர்கள் கூட்ட த்தில்
மொத்தமுள்ள 135 சட்ட மன்ற உறுப்பினர்களில் வெறும் 77 சட்ட மன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்றும்
அந்த அணி க்குள் ஸ்லீப்பர் செல் ஆக எனது ஆதரவு உறுப்பி னர்கள் இயங்கிக் கொண்டி ருக்கிறா ர்கள்" என்றும் தின கரன் கூறினார்.
தலைமைக் கழக நிர் வாகிகள் கூட்டம் நடந்த போது தங் களுடன் 21 பேர் இருந் தனர்; தோழமைக் கட்சி உறுப்பி னர்களும் போக வில்லை;
அத்தகைய சூழலில் அங்கே எப்படி 122 பேர் சென் றிருக்க முடியும்? என தினகரன் கேள்வி எழுப் பினார்.
குடியரசு தலை வருடன் நாளை எதிர் கட்சிகள் சந்திப்பு
முதல மைச்சர் எடப்பாடி பழனிச் சாமியும் துணை முதல மைச்சர் ஓ. பன்னீர் செல்வ மும் பதவி வில கினால் தான்
தற்போது எழுந் துள்ள பிரச் னைக்கு தீர்வு கிடை க்கும் என்றும் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாள ருக்குத் தான் இருக் கிறது.
அவர் இல்லாத நேரத் தில் துணை பொதுச் செயலாள ருக்குத் தான் அந்த அதிகாரம் இருக் கிறது. எடப்பாடி தரப்பு கூட்டும் பொதுக் குழு செல்லாது என்றும் தினகரன் கூறினார்.
இதற் கிடையே, தினகர னுக்கு ஆதர வாக உள்ள 19 உறுப்பி னர்களும் அ.தி.மு.க. உறுப்பி னர்களா கவே உள்ள தால்,
தற் போதைய சூழலில் சட்ட மன்ற த்தைக் கூட்டி பெரும் பான்மை யை நிரூபி க்கச் சொல்வது இயலாது என
ஆளுநர் தெரிவித் ததற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித் துள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் 12 உறுப்பி னர்கள் மட்டுமே இருந்த நிலை யில், நம்பி க்கை வாக் கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தர விட்டது ஏன் என்றும் ஸ்டா லின் கேள்வி எழுப்பி னார்.
நாளை காலை 11 மணி யளவில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். உள் ளிட்ட கட்சி களின் நாடாளு மன்ற உறுப்பி னர்கள்
டெல்லி யில் குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவி ந்தைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து முறை யிடவுள் ளனர் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித் தார்.
முதல்வர் ஆலோசனை
இதற் கிடையில், அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பி னர்களை மாவட்ட வாரியாக முதல மைச்சர் எடப்பாடி பழனிச் சாமி தலைமைச் செயல கத்தில்
நாளை காலை முதல் சந்திக்க வுள்ள தாக செய்திகள் வெளி யாகியு ள்ளன.
முதல மைச்சர் கூட்டிய கூட்டத்தி்ல வெறும் 77 சட்ட மன்ற உறுப்பி னர்கள் மட்டுமே கலந்து கொண்ட தாக டிடிவி தினகரன்
குறிப் பிட்டிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தமது மாவட்ட அமைச்சர்களுடன் முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.