சாமியார் ராம் ரஹீமுக்கான தண்டனை நாளை !

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியான சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 
சாமியார் ராம் ரஹீமுக்கான தண்டனை நாளை !
இதையடுத்து ஹரியானாவில் துணை ராணுவப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். 

பலாத்கார வழக்கில் தேரா சச்ச சவுதா அமைப் பின் நிறுவன ரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என ஹரியா னாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. 

இதையடுத்து ராம் ரஹீம் சிங் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெறி யாட்டம் போட்டனர்.

இந்த வன்முறையில் பெண்கள், குழந்தை கள் உட்பட 31 பேர் பலியாகினர். 250க்கும் அதிகமானோர் படுகாய மடைந்தனர்.
சாமியார் ராம் ரஹீமுக்கான தண்டனை நாளை !
கலவரத்தை கட்டுப் படுத்தாமல் ஹரியானா பாஜக அரசு வேடிக்கை பார்த்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 552 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தண்டனை

இந்நிலையில் ராம் ரஹீம் சிங்குக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ வாதிட உள்ளது.

வன்முறை?

பலாத்கார வழக்கில் குறைந்த பட்சம் 7 அல்லது 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் ராம் ரஹீம்சிங் ஆதரவு குண்டர்கள் வன் முறையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
ராணுவம் குவிப்பு

இதைத் தடுக்கும் வகையில் ஹரியானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 101 துணை ராணுவ கம்பெனிகள் குவிக்கப் பட்டுள்ளன.
Tags:
Privacy and cookie settings