உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் பைனலுக்கு, பி.வி.சிந்து முதல் முறையாக முன்னேறினார். உலக பாட் மின்டன் சாம்பியன் போட்டிகள் ஸ்காட் லாந்தில் நடந்து வரு கிறது.
நேற்று இரவு நடந்த அரை இறுதியில், தர வரிசையில் 4வது இடத்தில் உள்ள பி.வி. சிந்துவும், தர வரிசையில், 9வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யூபியும் மோதினர்.
நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான யூபிக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல், துவக்கம் முதலே, சிந்து அதிரடியாக விளையாடினார். முதல் செட்டில், 21-13 என்று சிந்து வென்றார்.
அதே தெம்புடன் விளையாடிய சிந்து, 21-10 என்று இரண்டாவது செட்டையும் வென்று முதல் முறையாக உலக சாம்பியன் போட்டியின் இறுதிக்கு முன்னேறினார்.
இதற்கு முன், இரண்டு முறை, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் ஒலிம்பிக் நாயகி. மொத்தம், 48 நிமிடங்களில், இந்தப் போட்டிக்கு முடிவுக்கு வந்து விட்டது.
முன்ன தாக நடை பெற்ற மற்றொரு அரை இறுதிப் போட்டியில் தர வரிசையில் 12வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெய்வால், ஜப்பானின் நோசோமி ஒகுகார விடம் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.
முதல் செட்டில், 21-12 என்று சாய்னா வென்றார். ஆனாலும், காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத சாய்னா,
இளம் வீிராங்கனை ஒகுகாராவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாவது செட்டில் 17-21 என்ற புள்ளிகளில் தோல்வி யைடைந்தார்.
மூன்றாவது செட்டை 21-10 என்று வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஒகுகாரா. உலக சாம்பியன் போட்டியின் மகளிர் பிரிவு பைனலுக்கு ஜப்பான் வீராங்கனை முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
பைனலில் பி.வி. சிந்துவும், ஒகு காராவும் மோத உள்ளனர். இது வரை இருவரும் 6 முறை மோதியுள்ளனர். அதில், இருவரும், தலா 3 முறை வென்றுள்ளனர்.
உலக சாம்பியன் போட்டியில், 2011ல் ஜூவாலா கட்டா – அஸ்வினி போபண்ணா, மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றனர்.
2013, 2014ல் பி.வி சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். 2015ல் சாய்னா நெய்வால், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார்.
தற்போதைய போட்டியில் சாய்னா வெண்கலம் வென்றுள்ளார். முதல் முறையாக பைனுக்கு நுழைந்துள்ள சிந்து, தங்கம் வெல்வார் என்று எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.