இந்நிலையில், இந்த பிரிவு, அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கக்கோரி, ஒரு தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பெண் களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களுடன் கணவன்மார்கள்
வலுக் கட்டாயமாக தாம்பத்ய உறவு கொள்வதை கற்பழிப்பு குற்றம் ஆக்கலாமா என்பது பற்றி பாராளுமன்றம் விரிவாக விவாதித்தது.
இறுதி யில், அது கற் பழிப்பு குற்றம் அல்ல என்ற முடிவு க்கு வந்து ள்ளது. ஆகவே, அது கிரி மினல் குற்றம் அல்ல’ என்று கூறினர்.
மேலும், ‘18 வயதுக்கு குறை வான இளம் பெண்கள், தங்கள் காதல ருடன் பரஸ்பர சம்மதத் துடன் உறவு வைத்துக் கொண்டாலும்,
அந்த ஆண் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்து, 7 ஆண் டுகள் சிறைத் தண்ட னை விதிப்பது மிகவும் கடுமை யானது’ என்றும் நீதிபதி கள் கருத்து தெரிவி த்தனர்.