கொடூரமான மாரத்தான் இது !

அவன் ஒரு சைக்கோ, அவர் மிகச் சிறந்த மனிதர், அந்த ஆள் ஒரு கொடூரன், இவனைப் போல் ஒரு மோச மானவைப் பார்த்த தேயில்லை, 
கொடூரமான மாரத்தான் இது !
அவர் தான் செய்வதைத் தெரிந்தே செய்கிறார்,  திமிர் பிடித் தவன். இப்படி யான அனைத்து வசை களுக்கும், 

பாராட் டுகளு க்கும் கேரி லாஸ் கென்ட்ரெல் ( Gary Laz Centrell ) கொடு க்கும் பதில் ஒன்று தான். அது அவரின் அடர் மீசை, தாடிக் குள் பொதிந்து இரு க்கும் புன் சிரிப்பு. 

உலகின் பல்வேறு பகுதி களிலி ருந்தும் இப்படி யான வசை களையும், பாராட் டுக்க ளையும் இவர் பெறு வதற்கான காரண மாக இருப்பது, 

இவர் ஆரம் பித்த பார்க்லே மாரத் தான் ( Barkley Marathon ) எனும் மாரத் தான் போட்டி தான்.

பார்க்லே அத்தனை சாதாரண மாரத் தான் போட்டி கிடை யாது. கடுமை யான உடல் உறுதி யும், மிகக் கடுமை யான மன வலி மையும் தேவைப் படும் 

ஒரு போட்டி. இதை லாஸ் ஆர ம்பித்த வருடம் 1986. ஒவ்வொரு வருட மும் தேர்ந் தெடுக்க ப்பட்ட 40 வீரர்கள் மட்டுமே போட்டி யில் பங்கெ டுக்க முடியும். 

இந்த 31 ஆண்டு களில் போட் டியை முழுதாக நிறைவு செய்த வர்கள் மொத்தம் 18 பேர் மட்டுமே.

அப்படி என்ன கஷ்ட த்தைக் கொடுக்கும் இந்தப் போட்டி ?

இந்தப் போட்டி அமெரிக்கா வின் டென் னெஸ்ஸி மாகா ணத்தில், ஒவ்வொரு வருடம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடை பெறும். 

இந்தப் போட்டி யில் 160கிமீ, 96கிமீ, 32கிமீ ஆகிய தூரங்களைக் கடக்கும் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொன் றுக்குமே 5 நிலைகள் இருக்கின்றன. 

அந்த 5 நிலை களுமே மரணத்தைத் தொடும் நிலை யில் இருக்கும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு விண்ண ப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தோடு இணைத்து 
இந்தப் போட்டியில் நான் ஏன் பங்கேற்க விரும்புகிறேன்?  என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். 

இப்படி யாக வரும் ஆயிரக் கணக்கான விண்ணப் பங்களிலிருந்து வருடத் திற்கு 40 போட்டி யாளர்க ளைத் தேர்ந் தெடுப்பார். 

தேர்ந் தெடுக்கப் பட்ட போட்டி யாளர்களுக்கு இறப்புச் செய்தியை அறிவி க்கும் கடிதம் அனுப்பப்படும். ( Letter of Condolences ).

போட்டி நாளன்று மதியத்திலிருந்து, நள்ளிரவு நேரத்திற்குள் எப்போது வேண்டு மானால் போட்டித் தொடங்கப் படும். 

லாஸ் தன்னுடைய சிக ரெட்டைப் பற்ற வைப்பது தான் போட்டிக் கான தொட க்கம். தொடங் கியதும் முதல் நிலை யாக காட்டி ற்குள் ஓடத் தொடங்க வேண்டும். 

கிட்டத் தட்ட 54,200 அடி உயரம் வரை இந்தப் போட்டி யில் ஓட வேண்டி யிருக்கும். 160கிமீ தூரத்தை 60 மணி நேரத்திற் குள்ளும், 

96கிமீ தூரத் திற்கு 40 மணி நேரமும், 32கிமீ தூரத்தை 13 மணி நேரத்திற் குள்ளும் ஓடிக் கடக்க வேண்டும்.

ஓடுவ தோடு மட்டு மல்லா மல் ஒவ்வொரு பிரி விற்கும் ஏற்ற வகையில் 9 லிருந்து 11 புத்த கங்கள் 
வரை காட் டினுள் ஆங் காங்கே ஒளித்து வைக்கப் பட்டிரு க்கும். அதற்கான குறியீ டுகளும் கொடுக் கப்பட்டிரு க்கும். 

அதைக் கொண்டு அந்தப் புத்தகங் களை சேகரிக்க வேண்டும். மொத்த போட்டி தூரத்தில் உதவி க்கு என யாரும் இருக்க மாட் டார்கள். இரண்டு இடங்களில் மட்டும் தண்ணீர் நிலையம் அமைக் கப்பட்டி ருக்கும்.

போட்டித் தொடங்கப் பட்ட 31 ஆண்டு களில், இது வரை இந்தப் போட்டி யில் 1240 பேர் பங்கெடுத் திருக்கி றார்கள். இதில் 18 பேர் மட்டுமே போட் டியை முழுமை யாக முடித்தி ருக்கின்றனர். 

போட்டி முடிக்கத் தவறி யவர்களில் தோல்வி யோடு வெளி வரும் போது, அமெரிக்கா வில் இறுதி ஊர்வல ங்களில் வாசிக் கப்படும் டேப்ஸ் ( Taps ) எனும் வாத்தியம் வாசிக் கப்படும். 

இப்படி யாக, இந்தப் போட்டியில் பங்கெடுப்ப வர்களுக்க கூடல் ரீதியா கவும், மன ரீதியா கவும் பல்வேறு துன் பங்கள் ஏற்படும்.

இப்படி ஒரு போட்டியை நடத்த காரணம் என்ன ?

அமெரிக்கப் போராளி மார்ட்டின் லூதர் கிங். ஜூனி யரைக் கொன்ற ஜேம்ஸ் எர்ல் ரே 1977ல், தான் அடைக் கப்பட்டி ருந்த டென் னெஸ்ஸி மாகாண 

சிறை யிலிருந்து தப்பி ஓடினார். 13 கிமீ தூரத்தை, கடுமை யான காட்டுப் பாதையில் 55 மணி நேரம் ஓடிக் கடந்து தப்பி த்தார். 
அந்த நிகழ்வு லாஸ்ஸை ரொம்பவே பாதித்தது. உயிர் பிழைக்க ஒருவன் இத்தனைக் கஷ்டங் களை அனுபவி த்திருக்கி றான் என்கிற விஷயம் அவரை ஆச்சர் யப்படுத் தியது.

இன்று பலரும் சொகுசான வாழ்க் கைக்குப் பழகிப் போயி ருக்கிறா ர்கள். தங்க ளின் சொகு சான வாழ்வை நகர்ந்து 

இயற்கை யோடு இணைவது கூட இன்று மிகப் பெரும் சவாலாக இருக் கிறது. நான் நடத்தும் 

இந்தப் போட்டி மனிதர் களை இயற்கை யோடு உறவாட வைப்பதே அன்றி... அவர் களைக் கொடுமைப் படுத்துவ தல்ல என் நோக்கம்... என்று தான் நடத்தும் போட்டிக் கான விளக் கத்தை அளிக் கிறார் லாஸ்.
Tags:
Privacy and cookie settings