வந்தே மாதரம் பாடாமல் மழுப்பிய பாஜக அமைச்சர் !

உத்திர பிரதேச அமைச்சர் ஒருவர் டி.வி. பேட்டி ஒன்றில் வந்தே மாதரம் பாடலை பாடாமல் மழுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
வந்தே மாதரம் பாடாமல் மழுப்பிய பாஜக அமைச்சர் !

சுதந்திர தினத்தை யொட்டி உத்திர பிரதேச அரசு மாநில பள்ளிகள் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்துடன் வந்தே மாதரமும் பாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


குறிப்பாக முஸ்லிம் கல்வி நிலையங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அதனை வீடியோ எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் சிறுபான்மை துறை நலன் அமைச்சராக இருப்பவர் பல்தேவ் சிங் ஆலுக். 

இவர் அண்மை யில் 'இந்தியா டுடே' தொலைக் காட்சி யின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற் றுள்ளார். வந்தே மாதரம் கட்டா யமாக்கப் படுவது 

குறித்த அந்த நிகழ்ச்சி யில் ஒரு கட்ட த்தில், நீங்கள் வந்தே மாதரம் பாடுங்கள் என்று அமைச் சரிடம் கூறி யுள்ளனர். ஆனால், அமைச் சரோ வந்தே மாதரத்தி லிருந்து ஒரு வரி கூட பாட வில்லை யாம். 


மாறாக, "வந்தே மாதர த்தை நாட்டில் உள்ள அனை வருமே பாட வேண்டும்" என்று பேச்சை மாற்றி எஸ்கேப் ஆகியுள்ளார்.

பாஜக அமைச்சர் ஒருவரே வந்தே மாதரம் பாடலை பாடாமல் எஸ்கேப் ஆன விவ காரம் சர்ச்சை யை ஏற்படு த்தியு ள்ளது.
Tags:
Privacy and cookie settings