குர்மீத் ராம் ரஹீமுக்கு சிறையில் விஐபி வசதி !

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள தேராசச்சா அமைப்பின் தலைவர் 
குர்மீத் ராம் ரஹீமுக்கு சிறையில் விஐபி வசதி !
குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஹரியாணா பாஜக அரசு சிறையில் விஐபி வசதி களை வழங்கி வருகிறது.

டெல்லி யில் இருந்து 70 கி.மீ. தொலை வில் உள்ள ரோஹ்டக் நகரத் தின் அருகே உள்ள சிறை யில் ஏசி வசதி செய்யப் பட்டுள்ள அறை குர்மீத்து க்கு வழங்கப் பட்டுள் ளது.

பாலியல் பலாத் கார வழக்கில் தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப் பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50) குற்றவாளி என்று சிபிஐ நீதி மன்றம் நேற்று (வெள்ளிக் கிழமை) தீர்ப்பளி த்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப், ஹரியா ணாவில் கலவரம் வெடித் தது. இதில் 31 பேர் பலியா யினர். 250-க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந் தனர்.
இந்நிலை யில் குர்மீத்து க்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக் கப்படுவ தாகத் தெரிய வந்து ள்ளது. இது குறித்துப் பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், 

''ஹெலி காப்டர் வசதி செய்து கொடுப் பதில் இருந்து அறை யில் ஏசி வசதி செய்து தருவது வரை பாஜக அரசு குர்மீத்து க்கு பல்வேறு சலுகைக ளைச் செய்து கொடுத் துள்ளது.

பாலியல் பலாத்காரம் போன்ற குற்றத்தைச் செய்து விட்டு, நீதி மன்றத்தால் தண்டனை பெற்றுள்ள ஒருவருக்கு, முதல்வர் கட்டார் அனைத்து வசதி களையும் செய்து கொடுக்கிறார். 

குர்மீத்தின் மகள் என்று கூறப்படும் ஹனிப்ரீத் என்ற பெண், அவருடன் பைகளையும், பெட்டிகளையும் சிறைக்குள் எடுத்துச் செல்ல அனு மதிக்கப் பட்டார்.

குர்மீத் காவலில் வைக்கப்பட்ட பிறகும், சில அதிகாரி கள் குற்ற வாளி என்று தீர்ப்பளிக்கப் பட்ட வரைப் போல நடத் தாமல் முழு மரியா தையை அளித் தனர்.
மற்ற கைதிகளுக்கு நிகராக குர்மீத்தை நடத்த முயன்றதற்காக உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு மூத்த அதிகாரி அறையப் பட்டார், மற்றொருவர் தள்ளி விடப்பட்டார் என்றார்.

யார் இவர்?

கடந்த 1991 செப்டம்பர் 23-ல் தேராசச்சா சவுதாவின் புதிய தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் பதவி யேற்றார். 

ஹரியாணா மாநிலம் சிர்ஸாவில் அந்த அமைப்பின் தலைமை ஆசிரமம் உள்ளது. உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை 

ஆசிர மங்களும் சுமார் 6 கோடி பக்தர்களும் உள்ளனர். குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு திருமணமாகி 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த 2014 ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் பாஜகவை ஆதரித்தார். அரசியல் செல் வாக்கு காரணமாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

தீர்ப்பின் எதிரொலி
பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக அங்கு கலவரம் வெடித்தது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் முழு வதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

அங்குள்ள பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. டெல்லி யில் ரயில், பஸ் எரிப்பு சம்பவ ங்கள் நிகழ்ந்தன.

கடவு ளின் மனிதர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட குர்மீத், ஆடம்பர வாழ்க்கைக்குப் பேர் போனவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings