கன்னியாகுமரியில் இருந்து, சென்னை செல்வதற்க்கு ரயிலிலோ அல்லது பஸ்சிலோ நாம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும் அவ்வாறு பயணம் செய்யும் பொது காலமும் நேரமும் அதிக அளவில் விரயம் ஆகிறது.
இந்த பயணங்கள் எல்லாம் வருங்காலத்தில் பழங்கதை ஆகக்கூடும். மக்கள் தொகை அதிகரிக்கும் பொது போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்க்கு விடைகான நினைத்த போது தான் எலான் மஸ்கின் சிந்தனையில் உதித்தது ஹைப்பர் லூப் இதை பற்றியே இன்றைய செய்தியில் காணப்போகிறோம்.
எலான் மஸ்க்
'தேவை தான் கண்டுபிடிப்பின் தாய்' என்பது டெக்னாலஜி உலகின் வேதவாக்கு என்றே சொல்லலாம். மனிதர்களின் தேவையைப் பொறுத்தே, புதுப்புது தொழில்நுட்பங்கள் வெற்றி பெறுகின்றன.
எலான் மஸ்க்
'தேவை தான் கண்டுபிடிப்பின் தாய்' என்பது டெக்னாலஜி உலகின் வேதவாக்கு என்றே சொல்லலாம். மனிதர்களின் தேவையைப் பொறுத்தே, புதுப்புது தொழில்நுட்பங்கள் வெற்றி பெறுகின்றன.
தற்போது ஒவ்வொரு மனிதருக்கும் நேரம் என்பது மிகவும் விலை மதிப்பில்லாத ஒன்றாகி விட்டது.
அத்துடன் 100 கி.மீட்டருக்குத் தேவையான ரயில்பாதை அமைப்பதற்கான செலவு, மனித உழைப்பு ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள்.
இந்த இரண்டு தேவைகளுக்கும் தீர்வாக அமைவதில் தான் இருக்கிறது இந்த ஹைப்பர் லூப்பின் வெற்றி. எலான் மஸ்க் TESLA, SPACEX, PAYPAL போன்ற நிறுவனங்களை நிறுவியவர்.
இவர் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, நிலம், நீர், விமானம், விண்வெளிப் பயணம் ஆகிய நான்கு போக்குவரத்து முறைகள் மட்டும் இல்லாமல், ஐந்தாவதாக ஒரு புதிய போக்குவரத்து முறை பற்றி யோசனை செய்து கொண்டிருப்பதாகவும்.
ஆனால் இதை விட குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் அதிக பாதுகாப்பினை உடைய எந்த ஒரு வானிலை மாற்றங்களையும், போக்குவரத்து நெரிசளையும் எளிதில் எதிர் கொள்ளும் வகையிலும், 1200 கி.மீ வேகத்திலும் செல்லும் எனவும் கூறினார்.
இதற்கு காரணம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைத்து கொண்டு இருந்தார்கள். இதற்கு பல நூறு கோடி டாலர்கள் செலவு செய்தார்கள்.
இதனாலேயே இந்த யோசனை தோன்றியது எனவும் இப்படி அடுத்தடுத்து ஆச்சரியங்களை விதைத்த, அந்த தொழில்நுட்பத்திற்கு 'ஹைப்பர் லூப்' எனப் பெயரும் வைத்தார் எலான் மஸ்க்.
ரயில் பாதை அமைப்பதற்கான செலவு, காலம் ஆகியவற்றை யெல்லாம் சிந்தித்துப் பார்த்தார் மஸ்க். உடனே 2013-ம் ஆண்டு ஹைப்பர் லூப்பின் தொழில்நுட்பத்தைப் பற்றி தனது பிளாக்கில் வெளியிட்டார்.
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்
சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்காத இந்த ஹைப்பர் லூப் என்பது ஒரே தொழில்நுட்பம் கிடையாது.
கன்கார்ட் விமானம்
கன்கார்ட் எனப்படும் விமானத்தின் வடிவமைப்பு, ஏர் ஹாக்கி எனப்படும் விளையாட்டின் தத்துவம், ரெயில் கன் எனப்படும் மின் துப்பாக்கி ஒன்றின் செயல்பாடு என காக்டெயில் கலவை தான் இந்த ஹைப்பர் லூப் .
ஒரு வெற்றிடம் கொண்ட, குழாய்க்குள் கேப்சூல் மூலம் பயணம் செய்யும் முறை தான் இந்த 'ஹைப்பர் லூப்'.
கன்கார்ட் விமானம்
இது மிகவும் வேகமாக பறக்ககூடிய விமானங்களில் ஒன்றாகும். வானில் பறக்கும் போது, காற்றுத் தடையைக் குறைப்பதற்காக விமானத்தின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.
அதே போலவே கேப்சூலும் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், கேப்சூலின் வேகம் காற்றினால் பாதிக்கப்படாத வகையில் இருக்கும்.
உதாரணமாக விமானத்தின் முனை மிகவும் கூர்மையாகவும், உடல் பகுதி ஏரோ டைனமிக்ஸ்க்காக மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.
அடுத்தது ரெயில் கன் (railgun) தொழில்நுட்பம்
இதனால் கேப்சூல் முன்னோக்கி செல்லும். ஆனால் இந்த மின்சக்தியால் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. இதற்கான மின்சக்தி சூரியஒளி மூலம் பெறப்படும்.
அந்த மேஜையின் கீழே, இயந்திரத்தின் உதவியுடன் காற்று உள்செலுத்தப்படும். இதனால் அந்த மேஜைக்கும், தட்டுக்கும் இடையேயான உராய்வு குறைந்து, இடைவெளி ஏற்பட்டு எளிதாக வழுக்கி செல்லும்.
மின்சக்தியை எடுத்து செல்லும் ஒரு உலோகத்தை, இரு காந்தங்களுக்கு இடையில் வைத்தால், அந்த உலோகம் நகரும் என்பது ரெயில் கன்னின் தத்துவம்.
இது தான் ஹைப்ப்ர்லூப் கேப்சூலின் உந்துசக்தியைக் கொடுப்பது. கேப்சூல் மின்சக்தியை எடுத்து செல்லும். கேப்சூலை சுற்றி இருக்கும் லூப்பில் காந்த சக்தி இருக்கும்.
அடுத்தது ஏர் ஹாக்கி
கேரம் போர்டு போன்ற பெரிய மேஜை மீது, சிறிய தட்டு ஒன்றை வைத்து விளையாடும் விளையாட்டு. அந்த மேஜையின் மேற்புறத்தில் ஏராளமான காற்றுத் துளைகள் இருக்கும்.
கேரம் போர்டு போன்ற பெரிய மேஜை மீது, சிறிய தட்டு ஒன்றை வைத்து விளையாடும் விளையாட்டு. அந்த மேஜையின் மேற்புறத்தில் ஏராளமான காற்றுத் துளைகள் இருக்கும்.
ஹைப்பர் லூப்பின் அமைப்பு
இந்த 'ஹைப்பர் லூப்பில் உள்ள குழாயானது ஸ்டீலால் செய்யப்பட்டு இருக்கும். இது வெல்டிங் செய்யப்பட்டு தொடர்ச்சியாக இருக்கும்.
ஒரே இடத்தில் இரண்டு குழாய்கள் ஒன்வே ரோட் மாதிரி போவதற்கும் வருவதற்கும் என்று ஒரு பெரிய பைலானில் பொருத்தப்பட்டு இருக்கும்.
ஒரே இடத்தில் இரண்டு குழாய்கள் ஒன்வே ரோட் மாதிரி போவதற்கும் வருவதற்கும் என்று ஒரு பெரிய பைலானில் பொருத்தப்பட்டு இருக்கும்.
இந்த குழாய்க்குள் பயணத்திற்கான கேப்சூல்கள் பொருத்தப்பட்டு, அவை செலுத்தப்படும். கேப்சூலின் உள்ளே பயணிகள் அமர்ந்திருப்பர்.
இது பெரிய நிலநடுக்கம் வந்தாலும் அதை தாங்க கூடியதாக இருக்கும். இதற்கான கட்டுமான செலவும், பயண செலவும் மற்ற வழிகளை விடவும் மிகவும் குறைவு என்பது இதன் சிறப்பு.
அது மட்டும் இல்லாமல் இதற்க்கு குறைந்த இடமே தேவைபடுவதால் நிலப்பிரச்னையும் வராது. அத்துடன் இது சூரிய சக்தியில் இயங்குவதால், மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவும் மிச்சமாகும்.
இந்த கேப்சூலில் 28 பேர் முதல் 40 பேர் வரை அமர முடியும். இந்த கேப்சூலின் நீளமானது 98.5 அடியாகவும், இதன் சுற்றளவு 9 அடியாகவும் இருக்கும். இதன் எடை சுமார் 20 டன் வரை இருக்கும்.
இந்த கேப்சூலின் முன் பக்கம் பெரிய கம்ப்ரசரும் (Compressor) பின் பக்கம் பேட்டரியும் (Bettary) பொருத்தப்பட்டு இருக்கும்.
இந்த கேப்சூலின் முன் பக்கம் பெரிய கம்ப்ரசரும் (Compressor) பின் பக்கம் பேட்டரியும் (Bettary) பொருத்தப்பட்டு இருக்கும்.
குக்கர் இயங்குவது எப்படி?
இந்த சிறிய கேப்சூல் நீளமான குழாயில் வேகமாக செல்லும் போது அந்த குழாயில் இருக்கும் காற்றை முன் பக்கமாக தள்ளி மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கும்.
இது இந்த கேப்சூலின் வேகத்தை குறைக்கும். இதற்கு Kantrowitz Limit என்று சொல்கிறார்கள். இதை தடுக்கவே இதன் முன் பக்கத்தில் கம்ப்ரசர் வைத்திருக்கிறார்கள்.
எப்படி இந்த கேப்சூல் நகரும்
இது LINEAR INDUCTION MOTOR தத்துவத்தில் இயங்குகிறது. கேப்சூலின் அடியில் மெட்டலும், குழாயில் காந்தமும் (MEGNET) பொருத்தப்பட்டு இருக்கும்.
இதற்கு இடையில் உருவாகும் மின்காந்த தூண்டல் (Electromagnetic Induction) மூலமாக இந்த கேப்சூல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும்.
இவற்றை செய்ய அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது. இந்த குழாயின் மேல் சோலார் பேணல் பொருத்தப் பட்டுள்ளதால் அதிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
தூண்டல் அடுப்பு (இண்டக்சன் ஸ்டவ்) தெரிந்து கொள்ள !
இது மட்டும் இல்லாமல் கேப்சூல் மற்றும் குழாய் இவை இரண்டிற்கும் இடையில் உள்ள உராய்வை குறைக்க ஏற் பியரிங்ஸ் உபயோகிக்கிறார்கள்.
இந்த ஏற் பியரிங்ஸ் காற்றின் அழுத்தம் காரணமாக கேப்சூலை கீழ் பகுதியில் தேயாமல் நிற்க வைக்கிறது. இதன் மூலம் கேப்சூல் வேகமாக செல்வதற்கான தகுதியைப் பெறுகிறது.
ஹைப்பர் லூப் செல்லும் பாதை
ஹைப்பர் லூப் செல்லும் பாதை
மேலும் இந்த ஹைப்பர் லூப்பின் பாதையும் சரியான முறையில் நேராக செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், வளைவுகள் அதிகமாக இருந்தால் G-Force உருவாகும்.
இந்த G-Force என்பது Gravity Force, இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ரோலர் கோஸ்டரில் மேலும் கீழுமாக செல்லும் போது எடை உள்ளது போலவும் எடை இல்லாதது போலவும் நமக்கு தோன்றும்.
இதை உருவாக்குவது இந்த G-Force தான். அதே போல மிக வேகமாக ரெயிலில் செல்லும் போது திடீரென வளைவில் திரும்பினால் G-Force -ன் அளவு அதிகமாக இருக்கும் இதனால் பயணிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படும்.
துபாய் நாட்டில் ஹைப்பர் லூப்
துபாய் நாட்டில் ஹைப்பர் லூப்
தற்போது இந்த தொழில்நுட்பத்தை டெஸ்லா மட்டுமில்லாமல், பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றன.
இன்னும் சில ஆண்டுகளில், இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்தை தொடங்கும் முதல் நாடாக துபாய் நாடு இருக்கும். இதற்கு ஹைப்பர் லூப் ஒன் நிறுவத்துடன் அந்த நாட்டு அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது.
மேலும் இந்தியாவில் மும்பைக்கும் பூனேவுக்கும் இடையில் இதை தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
இறுதியாக
இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்தை தொடங்கும் முதல் நாடாக துபாய் நாடு இருக்கும். இதற்கு ஹைப்பர் லூப் ஒன் நிறுவத்துடன் அந்த நாட்டு அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது.
ஃப்ரிட்ஜ் இயங்குவது எப்படி?தற்போது இதற்கான சோதனை கட்டம் தொடக்கி உள்ளது. வரும் 2021 துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையில் முதல் கட்டமாக போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் மும்பைக்கும் பூனேவுக்கும் இடையில் இதை தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
இறுதியாக
மேலும் இதை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இதற்கு நேர அட்டவணை தேவையில்லை எனவும் சொல்கிறார்கள்.