இத்தா என்றால் காத்தி ருத்தல் அல்லது கணக் கிடுதல் என்பது கருத் தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப் பட்ட பெண்கள் மறுமணம் செய் வதற்காக திருமணம் செய்யாது காத்தி ருக்கும் கால மாகும்.
இத்தாவுடைய காலம்
கணவன் இறந்தால் மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் அம்மனைவி யானவள் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா காலத்தை அனுஷ் டிக்க வேண்டும்.
அவள் கருவுற்ற வளாக இருப்பின் குழந்தை பெறும் வரை இத்தா காலமாக அமையும்.
அது ஒரு நாளா கவோ அல்லது பத்து மாதங் களாகவோ அல்லது ஒரு சில மணித்தி யாலங் களாகவோ அமையக் கூடும்.
உங்களில் எவரேனும் மனை வியரை விட்டு மரணித் தால் நான்கு மாதங் களும் பத்து நாட் களும் (மறுமணம் செய் யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)
கர்ப்பிணி களின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்ப தாகும்... (அல்குர்ஆன் 65:4)
கணவ னால் விவா கரத்துச் செய்யப் பட்ட பெண் களுக்கான இத்தா காலம் மூன்று மாத விடாய்க் காலம் ஆகும்.
விவாக ரத்துச் செய்யப் பட்ட பெண்கள் மூன்று மாத விடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228)
அவ்வாறு விவா கரத்துச் செய்ய ப்பட்ட பெண்ணுக்கு மாத விடாய் நின்றி ருப்பின் மூன்று மாத ங்கள் இத்தாவுடைய கால மாகும்.
உங்கள் பெண் களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷய த்தில் நீங்கள் சந்தேக ப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படா தோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்... (அல்குர்ஆன் 65:4)
பெண்கள் கணவனை விவாகரத்து செய்தால் (குல்உ) அப்பெண் களுடைய இத்தா ஒரு மாத விடாய்க் காலம் ஆகும்.
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனை வியை அடித்தார்.
அவரது கை ஒடிந்து விட்டது.
இதைக் கண்ட அப்பெண் மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலை வரான நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் வந்து முறை யிட்டார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, “அவள் உமக்குத் தர வேண்டி யதை (மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!” என்றார்கள்.
அவர் “சரி” என்றார். அப்பெண் மணியிடம் “ஒரு மாத விடாய்க் காலம் வரை (திருமணம் செய் யாமல்) பொறுத்திருக்கு மாறும்
தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளு மாறும் கட்டளை யிட்டார்கள்... அறிவிப்பவர் : ருபய்யிஃ (ரலி) .. நூல் : நஸயீ 3440
திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை யில் ஈடுபட முன்னர் விவாகர த்தான பெண் களுக்கு இத்தா இல்லை.
நம்பிக்கை கொண் டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன்
விவாகரத்துச் செய்து விட்டால் உங்களு க்காக அவர்கள் அனுச ரிக்கும் இத்தா ஏதுமில்லை. (அல்குர்ஆன் 33:49)
இத்தா எனும் காத்திருப்பு எதற்காக?
எவருக்கும் எந்த அநியா யமும் பாதிப்பு களும் ஏற்பட க்கூடாது என்பத ற்காக அல்லாஹ் மார் க்கத்தில் பல வரை யறை களையும் சட்டங் களையும் அமைத் துள்ளான்.
அதனை மனித ர்கள் மீறும் பட்சத் திலேயே இழப்பு களை எதிர்க் கொள் கின்றனர். அந்த வகையில் திருமணத்தின் மூலம் பெண் களுக்கே அதிக கஷ்ட ங்கள் இல்வாழ் வில் ஏற்படு கின்றது.
ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவளை விவா கரத்து செய்து விட்டாலோ இன்னும் அதிக இழப்பு களைச் சந்திக்க நேரிடு கின்றது.
இளம் வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்படின் அவளுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவை ப்படும். எனவே அவள் மறு மணம் செய்ய வேண்டும்.
கணவன் இறந்து அல்லது விவா கரத்து செய்த மறு கணமே அல்லது கால வரையறை எதுவுமின்றி அவள் மறுமணம் செய்தால் அவளுக்கு மறுமண த்தின் பின்னர் கிடைக்கும் குழந்தைக்கு தந்தை யார்?
என்பதில் சில வேளை களில் புதிய கணவ னுக்கோ மற்றவர் களுக்கோ சந்தேகம் ஏற்படலாம். இன்று விஞ்ஞான வளர்ச் சியின் காரண மாக
அதனை கண்டு பிடிக்க சாத னங்கள் இருப்பினும் பணத்தை வீசி பொய்யான மருத்துவ அறிக்கை களைப் பெறுவதும் கூட மிக இலகு வாக உள்ளது.
அதனால் பாதிக்க ப்படுவது அந்தப் பெண் மட்டு மல்ல அவளது குழந்தை யும் தான்.
அதனால் தான் அல்லாஹ் பெண்ணு க்கு மறுமணத் திற்காக ஒரு காத்திருப்பு (இத்தா) காலத்தை ஏற்படுத்தி கருவுற்றி ருப்பதை ஊர்ஜிதம் செய்து தெளிவு படுத்தியதன் பின்னரே மறுமணம் செய்ய அனுமதித் துள்ளான்.
இது பெண் களுக்கு கிடைத்த அல்லாஹ் வின் மாபெரும் அருட் கொடை யாகும். இத்தா வின் போது தடை செய்யப் பட்டவை மறுமணம் செய்யக் கூடாது. திருமண ஒப்பந்தம் செய்ய லாகாது.
(காத்தி ருக்கும் கால கட்டத்தில்) அவர் களை மணம் செய்ய எண்ணு வதோ, சாடை மாடை யாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்ற மில்லை.
அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல் வதைத் தவிர இரகசி யமாக அவர் களுக்கு வாக்குறுதி அளித்து விடா தீர்கள்!
உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களு க்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ் சுங்கள்!
அல்லாஹ் மன்னிப் பவன்; சகிப்புத் தன்மை மிக்க வன் என்பதை யும் அறிந்து கொள் ளுங்கள்! (அல்குர்ஆன் 2:235)
மை தீட்டல், நறுமணம் பூசுதல், சாயம் பூசுதல், அலங் காரம் செய்தல் தவிர்க்க வேண்டும்.
‘இறந்தவர் களுக்காக மூன்று நாட் களுக்கு மேல் துக்க த்தை வெளி ப்படுத் துவதற்கு தடு க்கப்பட் டுள்ளோம்.
ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்க த்தை வெளிப் படுத்த வேண்டும்.
இந்த நாட் களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடை களை அணியவோ கூடாது.
ஆனால் நெய்வ தற்கு முன் நூலில் சாயமிடப் பட்டு தயாரிக்கப் பட்ட ஆடை களை அணியலாம்.
எங்களில் ஒருத்தி மாதவிடா யிலிருந்து நீங்கக் குளிக்கும் போது மணப் பொரு ளைப் பயன்ப டுத்துவது அனும திக்கப்பட் டுள்ளது.
மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் தடுக்கப் பட்டுள் ளோம்” என உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார்... நூல் : புகாரி 313
கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப் பட்ட ஆடைகள், நகை ஆகிய வற்றை அணியக் கூடாது;
தலை க்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்... அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி).. நூல்: அபூதாவூத் 1960
மறுமண த்தைத் தள்ளிப் போடும் இந்தக் கால கட்டத்தில் நகை அணி யலாகாது.
மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்... அறிவி ப்பவர் : உம்மு ஸலமா (ரலி)... நூல் : அபூதாவூத் 1960, அஹ்மத் 25369
முற் றிலும் வண்ண ஆடை களைத் தவிர்த்து வெள்ளையும் வண் ணமும் கலந்த ஆடையை அணி யலாம்.
இத்தாவின் போது இருக்க வேண்டிய முறைகள்
மேற் கூறிய தடைகள் தவிர மற்ற விடய ங்களில் மார்க்கம் கூறிய தற்கமைய எந்நாளும் இருப்பது போல் சர்வ சாதார ணமாக இருக்கலாம்.
ஆனால் எம் சமுதா யத்து மக்களிடம் இத்தா இ ருக்கும் போது தான், யார் அஜ்னபி (திருமணம் முடிக்க அனுமதிக் கப்பட்ட வர்கள்), யார் மஹ்ரமி (திருமணம் முடிக்க அனுமதி க்கப்படாத வர்கள்) என்பதை ஆராய் வார்கள்.
கணவனை இழந்தால் அல்லது கணவன் விவா கரத்து செய்தால் தான் மார்க் கத்தின் வரை றைகள் நினை வுக்கு வரு கின்றன.
மார்க்க வரை யறைகள் எப்போதும் கடை பிடிக்க வேண்டி யவை. அவற்றை கடை பிடிக்க கணவன் இறக்கும் வரை அல்லது விவா கரத்து செய்யும் வரை இருக்க வேண்டிய தில்லை.
மார்க்கச் சட்ட மானது ஆண், பெண் எல்லோரு க்கும் பொது வானது. எப்போதும் பின் பற்றப்பட வேண்டியது.
தமது பார்வை களைத் தாழ்த்திக் கொள்ளு மாறும் தமது கற்பு களைப் பேணிக் கொள்ளு மாறும் நம்பிக்கை கொண்ட பெண்க ளுக்குக் கூறு வீராக!
அவர்கள் தமது அலங் காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்ற வற்றை வெளிப் படுத்த வேண்டாம். தமது முக்காடு களை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
தமது கண வர்கள், தந்தையர், கணவர் களுடைய தந்தையர், புதல் வர்கள், கணவர் களின் புதல் வர்கள், சகோதரர்கள், சகோதரர் களின் புதல்வர்கள்,
சகோதரி களின் புதல்வர்கள், பெண்கள், தங்க ளுக்குச் சொந்த மான அடிமை கள், ஆண் களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்ட மில்லாத பணி யாளர்கள்,
பெண்களின் மறை விடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர் களிடம் தமது அலங் காரத்தை அவர்கள் வெளிப் படுத்த வேண்டாம்.
அவர்கள் மறைத்தி ருக்கும் அலங் காரம் அறியப்பட வேண்டு மென்பதற் காக தமது கால் களால் அடித்து நடக்க வேண்டாம்.
நம்பிக்கை கொண் டோரே! அனை வரும் அல்லா ஹ்வை நோக்கித் திரும் புங்கள்! இதனால் வெற்றி யடைவீர்கள்... அல்குர்ஆன் 24:31
முஹம்மதே! தமது பார்வை களைத் தாழ்த்திக் கொள்ளு மாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளு மாறும் நம்பிக்கை கொண்ட ஆண்க ளுக்குக் கூறு வீராக!
இது அவர்க ளுக்குப் பரிசுத்த மானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறி ந்தவன்... அல்குர்ஆன் 24:30
எனவே இத்தா இருப் பதற்கு என்று விசேட மான முறைகள் எதுவு மில்லை.
சர்வ சாதா ரணமாக அன்றாடம் செய்யும் வேலை களைச் செய்து கொண்டு அல்லாஹ் தவிர்க்கும் படி கூறி யவைகளை மாத்திரம் தவிர்க்க வேண்டும்.
தேவை ஏற்படின் இத்தா காலத்தில் தொழி லுக்குக் கூட செல்ல அனுமதி உண்டு. ஆனால் மார்க் கத்தின் வரையறைகள் பேணப் பட வேண்டும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:
என் தாயின் சகோதரி மண விலக்குச் செய்யப் பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும் பினார்.
(இத்தரு ணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டி த்தார்.
ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக் கொள்!
ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமா னத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும் என்றார்கள்... நூல் : முஸ்லிம் 2972
இத்தா வின் போது நடைமுறைப் படுத்தப் படும் நூதனங்கள்
இத்தாவின் போது நம்முடைய சமுதாய மக்கள் மார்க்க த்தில் இல்லாத சட்டங் களையும் சடங்கு களையும் ஏற் படுத்தி பெண்களை கஷ்டப் படுத்து வதைக் காண லாம்.
ஆனால் இஸ்லாம் மார்க்கமோ எந்த ஒரு மதமும் காட்டித் தராத அளவுக்கு இந்த இத்தா மூலம் பெண் களுக்கு ஏராளமான நன்மை களை அள்ளித் தருகி ன்றது.
மனித ர்களால் ஏற்படுத்தப் பட்ட பின்வரும் நூதன மான காரியங் களை பார்ப்போம். வெள்ளை நிற ஆடையை மட்டும் இத்தா இருப்பவர் அணிதல்.
திரைச் சீலை, கட்டில் விரிப்பு, தலை யணை உறை போன்ற வற்றுக்கு வெள்ளை நிறத்துணி உபயோ கித்தல். முகம் பார்க்கும் கண்ணா டியைக் கூட விட்டு வைக் காமல் வெள்ளை நிறத் துணியால் அதனை மூடி விடல்.
கர்ப்பிணித் தாய் மாருக்கு இத்தா இருக்கும் பெண்ணை பார்க்கத் தடை. காரணம் கருவில் இருப்பது ஆண் குழந்தையோ என்ற சந்தேகம்.
ஒரு அறையில் இத்தா இருப்ப வரை பூட்டி வைத்தல். வீட்டிற் குள்ளேயே உலாவு வதற்குக் கூட தடை.
நோய் ஏற் பட்டால் வைத்தி யரிடம் அழைத்துச் செல்லா திருத்தல்.
தொலை க்காட்சி, புகைப் படம் (Photo) பார்க்க தடை.
இத்தா இருக்கும் பெண்ணின் பேரப் பிள்ளைகள் மற்றும் மகளின் கண வனை கூட பார்க்கத் தடை மற்றும் சிறு ஆண் பிள்ளை களைக் கூட பார்க்கத் தடை.
இவ்வனை த்தும் எமது மார்க் கத்தில் இல்லாத அல்லாஹ் வும் அவனது தூதரும் காட்டித் தராத மார்க்க த்துக்கு முரணான காரியங் களாகும்.
மறுமண த்திற்கு அனுமதி அளிக்கும் மார்க்கம்
எமது சமுதாய த்திலும் அந்நிய மதத்தவர் களைப் போல ஒரு பெண்ணின் கணவர் இறந் தாலோ அல்லது விவா கரத்து செய்தாலோ இத்தா வுடைய காலம் முடி வடைந்த பின்னர் காலம் பூராகவும்
அப்பெண் விதவை யாகவே இருக்க வேண்டும் என்று மறுமண த்திற்கு தடை விதித் திருப்பதும் மிகவும் வேதனைக் குரிய விடய மாகும்.
காரணம் எமது மார்க் கத்தில் தான் பெண் களுக்கு மறு மணம் செய்யும் உரிமை வழங்கப் பட்டுள்ளது.
எனவே மார்க்கம் அனு மதித்த ஒன்றை தடை செய்வ தற்கு எமக்கு எந்தவித அதிகா ரமும் கிடையாது.
பெண் களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர் களை விருப்ப ப்பட்டு
நல்ல முறை யில் மணந்து கொள் வதைத் தடுக்கா தீர்கள்! உங்களில் அல்லாஹ் வையும், இறுதி நாளையும் நம்பு வோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப் படுகிறது.
இதுவே உங்களு க்குத் தூய்மை யானது; பரிசுத்த மானது. அல்லாஹ்வே அறி வான். நீங்கள் அறிய மாட்டீர்கள்... அல்குர்ஆன் 2:232
உங்களில் எவரேனும் மனை வியரை விட்டு மரணித் தால் நான்கு மாதங் களும் பத்து நாட்களும் (மறு மணம் செய் யாமல்) அப்பெண்கள் காத்தி ருக்க வேண்டும்.
அந்தக் காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷய மாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.
நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந் தவன்... அல்குர்ஆன் 2:234