தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங் களைச் செய்து வரும் தமிழக அரசு, '11-ம் வகுப்பில்
நடப்பாண்டு முதல் பொதுத் தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இனி 600 மார்க்குக்கு மட்டுமே தேர்வு.
தேர்வு நேரம் மூன்று மணி நேரத்தி லிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப் படும்' போன்ற
பல்வேறு முக்கிய அறிவிப்பு களை வெளி யிட்டுள்ளது.
இன்று செய்தியாளர் களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இத்தகவல் களைக் கூறி யுள்ளார்.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டை யன் கூறுகை யில், '11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 1200 மதிப்பெண்கள், 600 மதிப்பெண்க ளாக குறைக்கப் படும்.
நடப்பாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப் படும். தேர்வு நேரம் மூன்றி லிருந்து
இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்பட உள்ளது. 
மாலை நேரங்களில் அரசுப் பள்ளிகளில் ஒரு மணி நேரமும், சனிக்கிழமை களில் மூன்று மணி நேரமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இதன் மூலம் மாணவர்கள் எதிர் காலத்தில் அதிக திறன் உள்ளவர் களாக மாற்றப் படுவார்கள்.
செய்முறை கையேடு களை மாணவர் களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட த்தில் இருக்கும் பொதுநிலை பட்டதாரி களுக்கு தற்கால பணிகள், அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது.
பெற்றோர், ஆசிரியர் சங்கம் இந்தத் தற்காலிக பணியாளர் களைத் தேர்ந்தெடுக்க உறுதுணை யாக இருப்பர்.
2018-19 கல்வி யாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்பு களுக்கு பாடத்திட்டம் மாற்றிய மைக்கப்படும்.
அதே போல 2019-2020 கல்வி யாண்டில் 2,7,10 மற்றும் 12-ஆம் வகுப்பு களுக்குப் பாடத்திட்ட த்தில் மாற்றம் இருக்கும். 
2020-2021 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்குப் பாடத்திட்ட த்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.
சிறந்த கல்வி யாளர்களை வைத்து பாடத்திட்ட த்தில் மக்கள் மன ஓட்டத்து க்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்ட வரைவு க்குப் பெறப்படும்.
புதிய பாடத்திட்ட த்தைப் பயிற்று விக்க ஆசிரியர் களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
11ஆம் வகுப்பில் தேர்ச்சி யடைய வில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து 12ஆம் வகுப்பு படிப்பார்கள்.
தோல்வி யடைந்த மாணவர்கள் அந்த ஆண்டு ஜூன் மாதமே மறுதேர்வு எழுதுவர்' என்று கூறினார்.
Thanks for Your Comments