கேரள ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த 10 கோடி !

கேரள லாட்டரி துறையால் ஓணத்தை முன்னிட்டு வெளியான சிறப்பு லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. 
கேரள ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த 10 கோடி !
கேரளா மாநில த்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு லாட்டரி குலுக்கல் போட்டி நடத்த படுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு நடைபெற்ற ஓணம் திருவிழாவை முன்னிட்டு கேரள லாட்டரி துறையால் சிறப்பு லாட்டரி குலுக்கல் போட்டி நடத்தப் பட்டது. 

இதில் 65 லட்சம் லாட்டரி சீ்ட்டுகள் விற்பனை யாகின. இந்நிலையில், மாநில அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் முன்னி லையில் இதற்கான குலுக்கல் நேற்று நடந்தது. 

இதில் முதல் பரிசான ரூ. 10 கோடிக் கான எண்ணாக AJ442876 தேர்வானது. இந்த டிக்கெட்டின் விலை ரூ. 250.
இந்த லாட்டரிக்கு உரிமையானவர், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தஃபா என்ற ஆட்டோ டிரைவர் ஆவர். இவருடைய தந்தை தேங்காய் வியாபாரி.

ரூ. 10 கோடிக்கான முதல் பரிசுத் தொகையை கேரள அரசு அறிவித்து இருப்பது இதுவே முதல் முறை யாகும். 2வது பரிசாக ரூ. 50,00,000 மும், 3வது பரிசாக ரூ. 10,00,000மும் அறிவிக்கப் பட்டு இருந்தது.

10 கோடி ரூபாய் வென்ற முஸ்தஃபா இது குறித்து கூறு கையில், குலுக்கல் போட்டியின் மூலம் தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு 

தனது கடனை அடைக்க உள்ள தாகவும், தன்னு டைய வீட்டை புதுப்பிக்க உள்ள தாகவும் தெரிவித்தார்.
திருவந்த புரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா ஹோம் ஆடிடோரி யத்தில் பரிசு குலுக்கல் நடந்தது. திருவோணம் பம்பர் 2017 என்ற பெயரில் பத்து வரிசை களில் லாட்டரி வெளி யிடப் பட்டு இருந்தது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள அரசு வெளி யிட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் மூலம் மாநில அரசுக்கு ரூ. 59 கோடி வருமானம் (ஜிஎஸ்டி வரியும் சேர்ந்து) கிடைத் துள்ளது.
Tags:
Privacy and cookie settings