மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றி னால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப் படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்து ள்ளது.
ஒவ்வொரு செல்போனுக்கும் 15 இலக்கங்கள் கொண்ட தனிப்பட்ட ஐஎம்இஐ அடையாள எண் உள்ளது. இது பேட்டரியை பொருத்தும் இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும்.
இந்த அடையாள எண், சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது. ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டு களை பயன் படுத்தினால் அந்த மொபைல் போன் இரண்டு ஐஎம்இஐ எண் களைக் கொண்டி ருக்கும்.
மொபைல் போனில் *#06# என்ற குறியீடு களை அழுத்தி னால் திரையில் ஐஎம்இஐ எண் தெரியும். திருடு போன மொபைல் போன் களின் ஐஎம்இஐ எண்களை வைத்து அவற்றை எளிதில் கண்டு பிடிக்க முடியும்.
ஆனால் திருடப் பட்ட மொபைல் போன் களில் சாப்ட்வேர் மூலம் ஐஎம்இஐ எண்ணை மாற்றி போலி ஐஎம்இஐ எண்ணை பொருத்தி சந்தையில் அமோக மாக விற்பனை செய்யப் படுகிறது.
இதனால் காணாமல் போன மொபைல் போன்களை கண்டு பிடிப்பது பெரும் சிரமமாக உள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அண்மை யில் நடத்திய ஓர் ஆய்வில் ஒரே ஐஎம்இஐ எண்ணில் சுமார் 18 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் பயன் பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த முறை கேட்டை தடுக்க ஐஎம்இஐ எண்ணை மாற்றி னால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம்
அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப் படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித் துள்ளது. இது தொடர் பாக கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகார பூர்வமாக அரசாணை வெளியிடப் பட்டிருக் கிறது.
மேலும் மொபைல் போன் திருடு போனால் அதனை முற்றி லும் செயலிழக்க வைக்கும் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்ட மிட்டுள்ளது.
மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்றும் புனேவைச் சேர்ந்த தனியார் நிறு வனம் இணைந்து சிஇஐஆர் எனும் தொழில் நுட்பத்தை உருவாக்கி யுள்ளது.
இந்த தொழில் நுட்பம் ஒவ்வொரு மொபைல் போனின் ஐஎம்இஐ தகவல் களுடன் இணைக்கப்படும். இதன் மூலம் காணாமல் போன மொபைல் போனை முற்றிலுமாக செயலிழக்க செய்ய முடியும்.
அந்த போனில் சிம் கார்டு இல்லா விட்டாலும் அதனை முடக்க முடியும். இதன் மூலம் மொபைல் போன் திருட்டுகள் குறையும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.