அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் The Beverly Hills Drink என்ற
நிறுவனம் Beverly Hills 9OH2O என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம் என்பது தான் வியப்புக்குரிய விடயமாகும்.
தெற்கு கலிபோர் னியானி யாவின் மலை யின் 5000 அடி உயரத்தி லிருந்து எடுக்க ப்பட்ட தண்ணீர் இந்த பாட்டிலில் நிரப்பப் படும். இந்த தண்ணீர் உலகின் சுத்த மான நீராக கருதப் படுகிறது.
Beverly Hills Drink நிறுவனத்தின் தலைவர் Jon Gluck கூறுகையில், Beverly Hills 9OH2O தண்ணீரின் சுவையானது, மென்மையானதாகவும், நம்ப முடியாத அளவு மிருது வானதாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.
இந்த வகை பாட்டில் களின் மூடிகளில் 600 சிறிய வெள்ளை நிற வைர கற்கள் மற்றும், 250 கருப்பு வைர கற்கள் பொருத்தப் பட்டுள்ளன.
இதோடு ஒரு வருடத்துக்கான மலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரும் பாட்டிலை வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.