8 வது பணக்காரராக உயர்ந்த பதஞ்சலி இயக்குநர் !

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆச்சார்யா பால கிருஷ்ணன் இந்தியாவின் 8வது பெரிய பணக் காரராக உயர்ந்துள்ளார்.
8 வது பணக்காரராக உயர்ந்த பதஞ்சலி இயக்குநர் !
கடந்த 2006ம் ஆண்டு பாபா ராம்தேவ் மற்றும் அவரின் நண்பர் ஆச்சார்யா பால கிருஷ்ணன் ஆகிய இருவராலும் தொடங்கப் பட்டது தான் பதஞ்சலி ஆயுர் வேதிக் நிறுவனம்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே இந்த நிறுவனம் அபரிமித மான வளர்ச் சியை கண்டு வருகிறது. 

ஹுரன் (HURUN) எனும் ஊடகம் வெளி யிட்டுள்ள இந்திய பணக்காரர் களின் பட்டிய லில் 8வது இடத்தை பிடித் துள்ளார். கடந்த ஆண்டு வெளி யிடப்பட்ட இந்த பட்டிய லில் பால கிருஷ்ணன் 25வது இடத் தில் இருந்தார். 

பாலகிருஷ்ண னின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 173 சதவீதம் உயர்ந்து, 70,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தற்போது 8வது இடத்தை பிடித்துள்ளார்.

ஹுரன் இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்ட ஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி 6வது வருடமாக முதலிடம் வகித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் போர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆச்சார்யா பால கிருஷ்ணன் 814வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நுகர் பொருள் விற்பனையில் ஹிந்துஸ் தான் யுனிலீ வருக்கு அடுத்த இடத்தை பதஞ்சலி நிறுவனம் பிடித்துள்ளது. மேலும் பதஞ்சலி நிறுவனத்தின் 94 சதவீத பங்குகளை ஆச்சார்யா பால கிருஷ்ணனின் வசமே உள்ளது.

இது பற்றி கூறும் பால கிருஷ்ணன், ‘வார விடுப்புகள் கூட எடுக்காமல் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைப்பதாகவும் தனக்கென்று தனியாக எந்த சம்பளமும் நிறுவனத்தில் இருந்து எடுத்துக் கொள்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings