100 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், மூன்று வயது குழந்தையையும் கைவிட்டு துறவறம் மேற்கொள்ள தம்பதி ஒருவர் முடிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில த்தின் சித்தோர்கர் மாவட்ட த்தை சேர்ந்த பா.ஜ.க கட்சி பிரமுகரின் மகள் அனாமிகா (34).
இவருக்கும் சுமித் ரத்தோர் (35) என்பவருக்கும் நான்கு ஆண்டு களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
தந்தையின் தொழிலை சுமித் கவனித்து வந்த நிலையில், அனாமிகா ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பள த்தில் ஐ.டி துறையில் பணி யாற்றினார்.
கோடீஸ்வரர்களான இவர்களின் குடும்ப சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில், குழந்தை, குடும்பம் மற்றும் சொத்துக்களை துறந்து துறவறம் மேற்கொள்வதாக சுமித்ரத்தோர் மற்றும் அனாமிகா அறிவித்துள்ளனர்.
இது குறித்து அனாமிகாவின் தந்தை கூறுகையில், மகள் மற்றும் மருமகனின் துறவறம் முடிவை தடுக்க முயன்றும் அதை அவர்கள் ஏற்கவில்லை.
தங்களின் ஆத்ம திருப்தி மற்றும் உள்ளுணர்வு உந்துதலால் இதை செய்ய அவர்கள் முடி வெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.