அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அரியலூரில் அனிதாவின் ஊரான குழுமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அனிதாவின் உடலுக்கு கௌதமன் அஞ்சலி செலுத்தினார்.
கௌதமன்
அவரிடம் பேசினோம், எங்களுக்கான மருத்துவ இடங்களை நாங்கள் இழந்து நிற்கிறோம். ஆசியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்கள், எங்கள் தமிழ் மாவர்கள் தான். எங்கள் வீட்டுப் பிள்ளை இறந்த பிறகு,
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 7 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா? அடுத் ததாக பொறியியல் மற்றும் சட்டப் படிப்பு களுக்கும் நீட் தேர்வு வர இருக்கிறது.
இனி எங்கள் பிள்ளைகள் நீதிபதியாக முடியாது. வக்கீலாக முடியாது. வேறு சமூகத்தினர் தான் அந்த இடத்துக்கு வருவார்கள். துண்டறிக்கை கொடுத்ததற்கே குண்டாஸ் போட்ட அரசாங்கம் தானே இது.
நாளை இவர்கள் பொறியாளர் களாகவும் வழக்கறிஞர் களாகவும், மருத்து வர்களாகவும் வந்தால் எங்களை விஷ ஊசிப் போட்டு கொல்வதற்கும் தயங்க மாட்டார்கள்.
நம்மை, நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கி றோம். மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து தான் நம் மீது நீட்டைத் திணித் துள்ளன.
கை கோர்த்துப் பதவி வாங்கத் தெரிந்த இவர்களுக்கு, மாநில உரிமையை நிலை நாட்டத் தெரியவில்லை.
இதற்காகவா உங்களை கோட்டைக்கு அனுப்பினோம். உங்களைக் காப் பாற்றிக் கொள்ள, நாங்கள் ஓட்டுப் போடவில்லை என்றார் கொதிப்புடன்.