அண்டெஸ் மலைத் தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப் பெரிய மழைக்காடும் சுற்றுச் சூழல் முக்கியத் துவம் வாய்ந் ததும் ஆகும்.
அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலம், காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப் படுகிறது.
அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும்.
இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோநீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது. பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத் தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாக மாறி விடுகிறது.
சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?நேரடியாக மரானான், உகயாலி, மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன.
நவாடோமிசிமி யிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது
இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக் குகிறது.
இந்த இடத்தையே பெரும் பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள்.
ஆயிரம் மைல்கள் கடந்த பின், கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ அமேசானுடன் இணைகிறது. அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.
பெரும்பாலான வற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத் துவங்கி, ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி
அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத் தொடங்கும். மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.
முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலன்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம்.
சிறிய 3,000 டன் அல்லது 9,000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3,600 கிமீ வரை செல்லலாம்.
இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும்.
பாரா ஆறு, அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன் டின்ஸ் ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப் படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும்.
பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா தீவு அமைந்துள்ளது.
இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும். அமேசான் ஆற்று டால்பின், அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது.
இதுவே ஆற்று டால்பின் வகை களில் மிகப் பெரிய தாகும். இங்கு அதிக ளவில் வாழும் பிரன்கா என்ற வகை மீன், ஆற்றில் இறங்கும் மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்க கூடியவை.
மனிதர்களும் தாக்கப் பட்டுள்ளார்கள். குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா, மனிதரை தாக்கும் வகையாகும்.
அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன.
இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும். அமேசான் கிளை ஆறுகளில் மனிதனின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி, கொல்லும் சக்தி கொண்ட மின்சார மீன்களும் ஏராளமாக உள்ளன.
இந்த வகை மீன்கள், மனிதனை கடித்ததும், அதன் உடலில் இருந்து மின்சாரம் போன்ற சக்தியை, மனித உடலில் பாய்ச்சும். இதனால் மனிதன் இறந்து விடுவான்.
எலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650-க்ஷி மின்சாரமாகும். அமேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறு தான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும்.
2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது.
சாம்பல் நிறத்துடனும் மிகக்குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது.
இந்த ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன.
மேலும் இவற்றின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் அமையப் பெற்று இருப்பதனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள ஏது வாயிருக்கின்றது.
இவற் றின் திறனைப் பற்றி பண்டைய கால மக்களும் அறிந்து வைத்தி ருந்தனர் என்ப தனை வரலாறு களில் அறிய முடி கின்றது.
பண்டைய ரோமா னியப் பேரர சர்கள் எலக்டிரிக் ஈலைக் கொண்டு தங்கள் எதிரியை கொன்று அழித்தனர்.
பண்டைய ரோமானிய மன்னர்கள் இவற்றை நன்கு அலங்கரித்து குளங்களில் வளர்த்து தங்களின் அரசியல் எதிரிகள்
மற்றும் தங்களுக்கு அடி பணியாத அடிமைகளை குளத்தில் தள்ளி இவற்றின் மூலம் சாகடித் துள்ளதை வரலாறுகளில் காண முடிகின்றது.
இவற்றின் மின் அதிர்வு பெரிய குதிரையையே 6 மீட்டர் தொலைவிற்குத் தூக்கி யெறியும் ஆற்றல் உள்ளதாகும்.
இந்த மீனைப் பொருத்த வரை தனது உணவிற்காக இவைகள் தனது எதிரியின் மீது மோதினாலே போதுமானதாகும்.
அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும் ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது.
எலக்ட்ரிக் ஈல் அவற்றின் மீது பட்டஉடன் மின் தாக்குதலால் உடனே செயலிழந்து விடுகின்றன அல்லது பொதுவாக இறந்து விடுகின்றன.
பட்ட மாத்திரத்தில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் ஆற்றல் இந்த உயிரினத்திற்கு மாத்திரம் தான் இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.
இவற்றின் உணவு பெரும்பாலும் இதர வகை மீன்கள் மற்றும் தவளைகளாகும்.
இருப்பினும் கூட இவை காடுகளின் பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றையும் நன்றாக உண்ணக் கூடியவை.