சவுதி அரேபியாவில், பெற்ற தாயை குத்தியும், கழுத்தை வெட்டியும் படுகொலை செய்த இரட்டை சகோதரர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அவரை மட்டு மன்றி 22 வயது சகோதரனையும் பல முறை ஈவிரக்கமின்றி குத்தியுள்ளனர்.
இச்சம்பவம் ரியாத்தின், அல்-ஹர்மா மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. கடந்த மாதம் இடம் பெற்ற இச்சம்பவத்தின் போது
67 வயதான ஹைலா அல்-ஆர்னி என்ற பெண் தனது மகன்களால் கழுத்து வெட்டியும், பல முறை குத்தியும் படுகொலை செய்யப் பட்டிருந்தார்.
சாலே மற்றும் காலிட் என்ற இரட்டைச் சகோதரர்கள் இக்குற்றத்தை புரிந்திருந்தனர்.
தாயை களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்று இக்குற் றத்தை புரிந்த அவர்கள் தமது 73 வய தான தந்தை யையும் விட்டு வைக்க வில்லை.
அவரை மட்டு மன்றி 22 வயது சகோதரனையும் பல முறை ஈவிரக்கமின்றி குத்தியுள்ளனர்.
ஐ.எஸ் ஆதரவு கடும் போக்குவாத சிந்தனைகளை ஏற்றுக் கொண்டமையே இப்படுபாதக செயலுக்கான காரணமென
சவுதி அரேபியாவின் உள் நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?
மேலும் கடந்த 3 ஆண்டு காலமாக அவர்கள் இவ்வாறான சிந்தனைகளால் ஈர்க்கப் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தின் போது வீட்டில் இருந்த 29 வயதான இரட்டையர்களின் சகோதரி, அறையை விட்டு வெளியே வராமையால் தப்பித்துள்ளார்.
மேற்படி சகோதரர்கள் ஐ.எஸ் உடன் இணைவதற்கு தாயார் மறுப்பு தெரிவித்தமையே கொலைக்கான காரணமென ஆரம்பத்தில் தகவல் வெளியாகி யிருந்தமை குறிப்பிட த்தக்கது.