உலக மயமாதல் விளைவாக ஒரு புறம் நன்மை இருந்தாலும், மறுபுறம் அதற்கு அதிகமாகவே எதிர் வினையும் இருக்கிறது.
ஏரியிலும், குளத்திலும் தண்ணீர் மோந்து கொண்டு போய் குடிப்பார்கள் அந்த காலத்தில் அதே ஊரில் வேலை கிடைக்கும் என்று கூறி தொழிற்சாலை ஆரம்பித்தார்கள்.
மக்கள் அங்கே போகவே, எந்த நீர் நிலையில் தண்ணீர் குடித்தார்களோ அதே நீர்நிலையில் அந்த ஆலையின் கழிவுகள்.
குடத்தில் பிடித்த அதே தண்ணியை தான் அந்த ஆலை பாட்டிலில் அடைத்து அதே ஊர் மக்களுக்கு விற்கிறது. இதுதான் உலக மயமாதலின் சில எதிர் வினைகள்.
ஒரு புறம் மக்கள் இயற்கை விவசாயத்தில் தலை சாய்த்து கொண்டி ருக்கும் வேளையில், மோடி மரபணு மாற்றப்பட்ட விதைகள், செயற்கை உரம் போன்ற நடவடிக்கையிலே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
எதிர் காலத்தில் நிகழப் போவதை திட்டமிடாமல் உற்பத்தியை மட்டும் பெருக் கினால், இப்போது கொஞ்சம் நஞ்சம் கிடைக்கும் விளைச்சல் கூட எதிர் காலத்தில் மொத்தமாக இல்லாமல் போய் விடும்.
தற்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனை யடுத்து மாநில அரசாங்கம் மூலமாக மத்திய அரசு மூன்றாண் டுகளில் செய்த திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து ரைக்க பல்வேறு பிரசா ரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலை யில் தான் மத்திய உணவு பதப்படு த்தும் துறை அமைச்சர் கேரளா வில் சுமார் 80 ஏக்கரில் அமைய உள்ள உணவு பூங்காவு க்கு அடிக்கல் நாட்டி யுள்ளார்.
அந்த நிகழ்வின் போது, இந்தியாவை உலகின் உணவு தொழிற் சாலை யாக மாற்று வதற்கு ஏதுவாக முதலீட் டாளர் களுக்கு நமது பிரதமர் மோடி தலைமை யிலான அரசாங்கம் வெளிப் படையான சூழல் உருவாக் கப்படும்.
உணவுத் துறை யில் முதலீடு செய்ய விரும்பு பவர்களுக்குத் தேவையான இலகுவான, வெளிப் படையான நிலைமையை உருவாக் குவதற்கு இந்த அரசாங்கம் அனைத்து நடவ டிக்கை களையும் எடுக்கும் என்று கூறியுள்ளார்.
இதனை வைத்து பார்த்தல் விவசாய துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை அனு மதித்து இதனையும் ஒரு கார்பரேட் தொழிலாக மாற்ற முயற்சி நடக் கிறது என்று கண் கூடாக தெரிகிறது.