நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்குக் காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவ கங்ககை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதாவின் மரணத்தை ஏற்படுத்திய நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷ மிட்டார்கள்.
கல்லூரியை விட்டு சாலையில் வந்து போராடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். நீங்கள் அனுமதி வாங்கி விட்டு போராடுங்கள் என்று போலீஸ் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது.
அதற் குள்ளாக போலீஸ் வேன்கள் போலீஸ் எனப் பட்டாளமே குவிக்கப்பட்டது. அதன் பிறகு கல்லூரி வளாகத்துக்குள் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்த ஆரம் பித்தார்கள் மாணவர்கள்.
போலீஸ் டிஎஸ்பி கார்த்தி கேயன் தலைமை யில் ஒரு டீம் காத்திரு க்கிறது. எந்த நேரம் வேண் டுமானா லும் இவர்கள் கைது செய்யப் படலாம்.
இந்நிலையில், இந்தப் போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களிடம் பேசும் போது.. ஒரு கூலித் தொழிலாளியின் பிள்ளை இந்த நாட்டில் கஷ்டப்பட்டுப் படித்து அதிக மான மதிப் பெண் பெற்று தான்
கண்ட டாக்டர் கனவை அடையக் கூடிய தகுதி இருந்தும் மத்திய அரசின் நீட் தேர்வு முறை யால் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார். மேல் தட்டு மக்களுக் காகக் கொண்டு வரப் பட்ட நீட் தேர்வு முறை இது.
தற்கொலை செய்யும் அளவுக்கு நம்முடைய அரசாங்கத்தால் வலுக்கட்டாய மாகத் தள்ளப் பட்டிருக்கிறார் அனிதா. இவரின் மரணத்தால் நீட் தேர்வுக்குத் தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக அரசு கல்வித் துறையில் மற்றவர் களோடு போட்டி போடும் அளவுக்குத் தகுதியான கல்வி முறையைக் கொண்டு வராதது தான்
இந்த மரணத்துக்கு முதல் காரணம். ஆகத்தகுதி இருந்தும் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால் தான் இப்படி யொரு முடிவை அனிதா எடுத்தி ருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்க வில்லை. மாநில அரசின் கல்வி உரிமையில் மத்திய அரசு தலையிடக் கூடாது. தமிழ கத்தில் தான் அதிக மான மருத்து வக்கல்லூரிகள் இருக்கின்றன.
இங்கெல்லாம் இனிமேல் வட இந்தியர் களின் பணக்காரர் பிள்ளைகள் தான் படிப்பார்கள். தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.
மத்திய அரசு மாணவர்களின் புரட்சியைத் தமிழகத்தில் அவ்வப்போது சீண்டிப் பார்க்கின்றது என்று கொதித் தெழுகிறார்கள் போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்கள்.