புர்கா தடைக்கு ஆதரவு அளித்த சுவிஸ் !

சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்திரை மற்றும் புர்கா அணிய தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கு அந்நாட்டு பாராளு மன்றம் ஆதரவு அளித்து ள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
புர்கா தடைக்கு ஆதரவு அளித்த சுவிஸ் !
சுவிஸ் மாகாண ங்களில் ஒன்றான St Gallen மாகாண அரசு தான் இப்புதிய மசோதா விற்கு ஆதரவு அளித்து ள்ளது.

சுவிஸில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சி பொது இடங்களில் முகத்திரை மற்றும் புர்கா அணி வதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது.

பொது இடங்களில் பெண்கள் புர்கா மற்றும் முகத்திரை அணிந்து செல்வதால் பாதுகாப் பின்மை ஏற்படுகிறது. மாகாண பாதுகாப்பிற்காக இதனை தடை செய்ய வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி வலியுறுத்தியது.

மாகாண பாராளு மன்றத்தில் இப்புதிய மசோதா நேற்று முன் தினம் தாக்கல் செய்யப் பட்ட போது 59 உறுப்பினர்கள் ஆதரவு அளித்து வாக்களி த்துள்ளனர். 
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித் தாலும் மசோதா மீது விவாதம் நடத்தப்படும்.

இந்த விவாதத்திற்கு பின்னர் மாகாண பொது மக்கள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடை பெற்று அதில் பெரும் பான்மை கிடைத்தால் இம்மசோதா நடை முறைக்கு வரும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings