கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவை யெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசை வைக்கக் காரணம், அதன் சுவையே.
மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக் காயை ஒடிச்சிப் பார்க் கிறதும், தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப் பார்க்கிறதும் பலருக்கு வழக்கம்.
அதே போல மீன் வாங்கும் போது... அது நல்ல மீனா, கெட்ட மீனானு எப்படித் தெரிஞ் சுக்கிறது? பல தடவை நல்ல மீன்னு நினைச்சு வாங்கிட்டு வந்து, வயிற்றுக்கும் ஒத்துக்காம, வாய்க்கும் நல்லா இல்லாமப் போய்...
வீட்டுல திட்டு வாங்கி... வாங்கி பல பேருக்கு மீன் குழம்பே பிடிக்காமப் போயி ருக்கும். எப்படி நல்ல மீன் வாங் குறதுனு தெரிஞ் சிக்க,
கடல் மீன் களைப் பற்றி நிறையத் தெரிஞ்சு வெச்சி ருக்கிற மீனவர், புது கல்பாக்கம் எஸ்.நாக ராஜனை சந்திச்சுக் கேட்டு வந்தோம். அவர் தந்த யோச னைகள் இதோ...
1. மீன், பார்க்கும் போது புதுசா, ப்ரெஷ்ஷா இருந்தா நல்ல மீன்.
2. மீனின் செவுளைத் திறந்து பார்த்தா, செந்நிறமா இருக் கணும். சாம்பல் நிறமா இருந்தா, அது கெட்டுப் போன மீன்.
3. உங்களு க்குப் பிடிச்ச மீனாக இருந்து, அதை வாங் கியே ஆகணு ம்னு நீங்க நினை க்கும் போது,
கல்லீரல் பிரச்சனையும் தீர்வும் !
அதில் எங்காவது அடிபட்டி ருந்தா, வேண் டாம் விட்டு ருங்க.
4. மீனின் கண்கள் மங்கலா இல்லாம, தெளிவா இருக் கணும்.
5. ஐஸ் அதிகம் சேர்ந்த மீன் ஆகாது. ஐஸ் அதிகம் சேர்ந்தி ருந்தா, மீனின் மேல் விரலால் கோடு போட்டா தெரிஞ் சுடும்.
6. நீங்கள் வாங்கும் மீன் கெட்டுப் போனதா இருந்தா, அது ஃபுட் பாய்ஸன் ஆகும்.
7. செதில் அதிகமா இருக்கிற மீனும், உள்ளே முள் அதிகமா இருக்கிற மீனும் ருசியா இருக்கும். ஆனா, குழந் தைகள் சாப்பிட முடியாது.
8. மீனைத் தொட்டுப் பார்க்கும் போது, நொள நொளனு இருக்கக் கூடாது.
9. நண்டை கையில் எடுத்துப் பார்க்கும் போது வெயிட்டா இருக் கணும்.
பெண்களை பாதிக்கும் பித்தப்பை கற்கள் !
10. பூச்சியைப் போல சிவப்பு நிறத்துல இருக்கிற இறாலை வாங்காம, ஃப்ரெஷ்ஷா, தெளிவா இருக் கிறதை வாங் குறது நல்லது.