ஜெயலலிதா இட்லியும் சாப்பிட வில்லை, சட்னியும் சாப்பிட வில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொது மக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்.
என்று மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய நிலையில்
'அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்?' என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கேள்வி எழுப்பி யுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் பா .சிவந்தி ஆதித் தனார் நினைவு இல்ல த்தில் அவரது படத் துக்கு மரியாதை செலுத்தி விட்டு செய்தி யாளர் களை சந்தித்த தீபா இவ்வாறு கூறினார்.
தீபா பேசிய தாவது:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் காலம் கடந்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா உடல் நிலை குறித்து பொய் சொன்னதாக கூறி இருக்கிறார்.
அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்? என்பது பற்றி முழு உண்மை களையும் வெளி யிட வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தை பொறுத்த வரை சசிகலா குடும்பத்தினர் மீது நானும் குற்றச் சாட்டுகளை கூறியிருக்கிறேன்.
அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அச்சமின்றி துணிந்து வெளியிடட்டும். புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் இருந்திருந்தால் டி.டி.வி. தினகரன் முன் கூட்டியே வெளியிட்டிருக் கலாமே.
அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டாலும் வெளியிடா விட்டாலும் நான் வழக்கு தொடர்வது உறுதி.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பிரதமரிடம் கோரி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags: