இரட்டை இலை இறுதி தீர்ப்பு நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு !

0
இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவல கத்தில் இன்று நடைபெற்றது. 

இரட்டை இலை இறுதி தீர்ப்பு நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு !
இவ்வழ க்கில் டி.டி.வி தினகரன் தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் இன்று வாதங்களை முன் வைத்தனர். முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 

துணை முதல மைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன், 

டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் சசிகலா சார்பில் மூத்த வழக்க றிஞர் ஹன்சாரியா ஆகியோர் ஆஜரா கினர்.

முதலில் தனது வாதங்களை முன் வைத்த டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் பக்கம் உள்ளார். 

அதனால் கவலையே வேண்டாம். அவர் நமக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கி தந்து விடுவார் என்று கூறியி ருக்கிறார். இது தேர்தல் ஆணைய த்தின் மீது பெரும் கலங்க த்தை ஏற்படுத்தி யுள்ளது. 
தேர்தல் ஆணையம் தன்னிச் சையாக செயல்படும் அமைப்பு. இதில் எங்கிருந்து பிரதமர் மோடி வருகிறார் என்பது புரிய வில்லை. 

இதற்கு அம்மாநில அமைச் சர்கள் தரப்பிலோ அல்லது சம்பந்தப் பட்ட அமைச்சர் தரப்பிலோ எவ்வித மறுப்பும் தெரிவிக் கப்பட வில்லை. 

இதன் மூலம் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக் கொண்டிரு க்கிறார்கள் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ் வைத்திய நாதன், இது இந்த வழக்கிற்கே தேவை யில்லாத வாதம். 

அமைச்சர் தனது தனிப் பட்ட கருத்தாக எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கிறார். அதற்காக எல்லாம் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது. இது மாபெரும் தவறு என்று தெரிவி த்தார்.

பின்னர் மீண்டும் வாதங் களை தொடர்ந்த அபிஷேக் சிங்வி, “நாங்கள் தேர்தல் ஆணையம் மீது எவ்வித சந்தேகமும் எழுப்ப வில்லை. 

ஆனால் அமைச்சர் இவ்வாறு பேசியது தேர்தல் ஆணை யத்திற்கு ஏற்பட் டுள்ள கரும் புள்ளி யாகவே இருக் கிறது என்று தான் கூறுகிறோம். 
இதற்கு மறுப்பு கூட தெரிவிக்கப்பட வில்லை. நாங்கள் பிரமான பத்திரங்கள் ஜோடிக்கப் பட்டவை என்று கூறியுள்ளோம். இது தொடர்பாக அதிமுக பொதுக்குழு உறுப்பி னர்களே ஆணைய த்தில் கடிதம் அளித்து ள்ளார்கள். 

இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த பின்னர் தான் சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணை யர்கள், ஆணையம் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற விவகார த்தில் தீர்ப்பு மட்டும் தான் வழங்கும். 

இதர விவகார ங்களில் தலை யிடாது. போலி பிரமாண பத்திரங்கள் போன்ற வைகள் எல்லாம் கவனிக் கப்படவேண்டிய விவகா ரங்கள் இல்லை. 

ஆணைய த்திடம் புகார் மனு கொடுத்துள்ளார்கள் என்றாலும், அதை ஆணையம் பரிசீலிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
ின்னர் மீண்டும் வாதங்களை தொடர்ந்த சிங்வி, ஆணையம் இவ்விவகாரத்தில் தவறு செய்கிறது.சம்பந்தப் பட்ட பொதுக்குழு உறுப்பி னர்களே தாங்கள் மிரட்டப் பட்டுள்ளோம், 

போலியாக கையெழு த்துக்கள் போடப் பட்டுள்ளன என காரணங் களை தெரிவித்து புகார் மனு அளித் துள்ளனர். இதை தேர்தல் ஆணையம் பரிசீலிக் காமல் எப்படி முடிவு அறிவிக்க முடியும் ? 

இது சட்டத் திற்கு புறம்பான தீர்ப்பாக மட்டுமே பார்க்கப் படும்” என்று தெரிவித்து தனது வாதங்களை முடித்தார்.

பின்னர் தனது வாதங் களை வைத்த சசிகலா தரப்பு வழக்க றிஞர் ஹன்சாரியா, பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று இவர்கள் சொல்கி றார்கள். 

ஆனால் இன்றைக்கு இதை எதிர்த்துள்ள ஓ.பன்னீர் செல்வம் உட்பட எதிர் தரப்பில் உள்ளோர் தான் அவரை பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்தனர். 
பொதுச் செயலாளர் என அவர்களே தேர்வு செய்து விட்டு, இப்போது அவர்களே அது சட்டப்படி தவறு என்று கூறுவது தான் நகைப் புக்குரிய தாக உள்ளது. 

அதிமுக வுக்கு ஏற்கனவே நியமன பொதுச் செயலாளர் நியமிக்கப் பட்ட வரலா றுகள் உள்ளன. 

1989ம் ஆண்டு அதிமுக வின் நியமன பொதுச் செயலா ளராக ஜெயலலிதா நியமிக்கப் பட்டிரு ந்தார். 1993 வரை அவர் நியமன பொதுச் செயலாள ராக நீடித்து வந்தார். 

1991ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு, நியமன பொதுச் செயலாளர் என்கிற முறையில் தான் அவர் இரட்டை இலை சின்னத் திற்கு உரிமை கோரியி ருந்தார். 

அதற்கு தேர்தல் ஆணையமும் அன்று ஒப்புதல் அளித்தி ருந்தது. அதன் காரண மாக பொதுச் செயலாளர் நியமனம் செல்லு படியானது தான். 

அதே போல துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியமனும் கட்சி விதிகளின் படி செல்லத் தக்கது தான். 
அதிமுக அடிப்படை கட்சி விதிகளின் படி, பொதுச் செயலாளரே கட்சியின் துணைப் பொதுச் செயலா ளரை தேர்வு செய்ய முடியும். 

இன்றைக்கு பொதுச் செயலாளர் சிறையில் உள்ளார், துணை பொதுச் செயலாளர் மீது வழக்கு உள்ளது என்று கூறி நீக்கு கிறார்கள். 

அப்படி பார்த்தால் 1996ம் ஆண்டு, 1999ம் ஆண்டு, 2014ம் ஆண்டு களில் அதிமுக வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தான் இருந்தார். 

அப்போது அவர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அதே வேளையில் அவர் மீதான குற்றச் சாட்டுக்களும் பல்வேறு வழக்கு களில் நிரூபிக்கப் பட்டும் உள்ளது. 

அப்போ தெல்லாம் ஏன் அவரை பொதுச் செயலாளர் பொறுப்பி லிருந்து யாரும் நீக்க முன்வர வில்லை ? 
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளது. 

ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் அவர் மீதான வழக்கை முடித்து வைக்கி றோம் என்று தான் உச்சநீதி மன்றம் தெரிவித் துள்ளது. 

அதன் ஆணையை கூட நாங்கள் ஆணையம் முன்பு சமர்பிக்கின்றோம். இப்போது நிரந்தர பொதுச் செயலாளர் என்று ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்ட நபரை தான் 

அவர்கள் தேர்வு செய்துள்ள தாக கூறுகிறார்கள். இப்போது மட்டும் கட்சிக்கு கலங்கம் ஏற்பட்டு விடாதா? இதை யெல்லாம் தாண்டி பொதுக்குழு கூட்டக் கூடிய அதிகாரம் பொதுச் செயலாள ருக்கே உண்டு. 

இவர்கள் கூட்டி யுள்ள பொதுக்குழு அதிமுக அம்மா - புரட்சி தலைவி அம்மாவுக் கானது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவை எப்படி இரு அணி களும் நீக்க முடியும் ? 
ஆக பொதுச் செயலாளர் நியமனமும், துணை பொதுச் செயலாளர் நியம னமும் சட்டப்படி சரியானது தான் என்று தெரிவித்தார்.

பின்னர் தனது வாதங் களை வைக்கத் தொடங்கிய பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ் வைத்திய நாதன், 

டிடிவி தினகரன் தரப்பும், சசிகலா தரப்பும் தேவை யில்லாமல் வழக்கை திசை திருப்பு கின்றனர். 

6 மணி வரை தான் வழக்கினை விசாரிக்க முடியும் என்கிற போது இவர்கள் தேவை யில்லாமல் 5.30 மணி வரை தற்போது வாதங் களை முன் வைத்து, வேண்டு மென்றே கால தாமதம் செய்கி றார்கள். 

எங்களிடம் போது மான அளவில் பெரும் பான்மை உள்ளது. அதனால் சின்னத்தை எங்கள் தரப்புக்கு ஒதுக்கி, டிடிவி தினகரன் தரப்பு கோரிக் கையை நிராகரி க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த வாதங் களை எல்லாம் கேட்ட தேர்தல் ஆணையம், வழக்கில் தொடர் புடைய இரு பொதுக் குழு உறுப்பி னர்கள் தாங்கள் மிரட்டப் பட்டதாக கூறி மனு ஒன்றை அளித் துள்ளனர். 
அது தொடர் பாக ஆணையம் விசாரணை எதுவும் நடத்த முடியாது. ஆனாலும் இது தொடர்பாக தினகரன் தரப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள காரணத் தால், 

வரும் புதன் கிழமை வழக்கினை ஒத்தி வைத்து, அன்றைய தினத்தில் அது தொடர் பான வாதங்கள் கேட்கப் படும் என்று தெரிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings