சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலர் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் இன்று வெளி யிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர் களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப் படுவதாக தெரிவிக் கப்பட்டு ள்ளது.
அதன்படி, குறைந்த பட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து உயர்த்தப் பட்டு 15,700 ரூபாயாகவும் அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயி லிருந்து இரண்டே கால் லட்ச ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
இதே போல, அரசு ஊழியர் களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய வையும் 2.57 மடங்கு உயர்த்தப் பட்டுள்ளன.
ஓய்வு பெறும் போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்ச ரூபாயி லிருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தப் பட் டுள்ளது.
அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர் ஆகியோரது ஊதி யமும் இதே போல இரண்டரை மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறை களில் தொகுப் பூதியம், மதிப்பூதியம், நிலை யான ஊதிய த்தை பெற்றுவரு வோரின் ஊதியமும் 30 சதவீதம் அதிகரிக் கப்பட்டு ள்ளது.
இந்த ஊதிய உயர்வின் காரண மாக தமிழக அரசுக்கு 14,719 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
கண்டனம்
ஆனால், இந்த ஊதிய உயர்வுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில அரசின் வரி வருவாயில் 67 சதவீதம் அளவுக்கு ஊழியர்களின் ஊதியத் திற்கே சென்று விடுவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவழிக்க முடிய வில்லையென இந்த அமைப்பு சுட்டிக் காட்டி யுள்ளது.
சம்பள உயர்வு என்பது மாநில அரசின் நிதி நிலையைப் பொறுத்து எடுக்கப் படும் முடிவு என்பதால், இதில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை
மாநில அரசு ஊழியர் களுக்குத் தர வேண்டிய தில்லை யென்றும் இந்த அமைப்பு கூறியி ருக்கிறது.
Thanks for Your Comments