புதுச்சேரியின் நகர்ப்புறத்தில் இயங்கும் அரசு பள்ளிகளில் உணவு இடைவேளை நேரக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு முன் புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் உணவு இடைவேளை ஒரு மணி நேரம் 35 நிமிடங்களாக இருந்தது. தற்போது ஒரு மணி நேரம் 5 நிமிடங்களாக குறைக்கப் பட்டுள்ளது.
இந்த முறைப் படி காலை 9 மணிக்கு வகுப் புகள் தொடங்கி, பகல் 12.25க்கு உணவு இடை வேளை விடப்படும். மீண்டும் 1.30க்கு வகுப் புகள் தொடங்கும்.
அரை மணி நேரம் உணவு இடை வேளை குறைக்கப்பட்டதால், வழக்க மான நேரத்தை விட அரை மணி நேரம் முன்ன தாக 3.45-க்கே பள்ளி நேரம் முடிந்து விடும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
காலாண்டு தேர்வு முடிந்து அரசு பள்ளிகள் திறக்கப் பட்டுள்ள தால், இன்று முதல் மாற்றி அமைக்கப் பட்ட நேரம் நடை முறைக்கு வந்துள்ளது.
Thanks for Your Comments