கீழ்ப்பாக்கத்தில் வழக்கறிஞர் வீட்டில் வேலை செய்த சமையல் காரர், ஆளில்லாத நேரத்தில் நகைகளைத் திருடி மாயமானார்.
அவரை 6 மணி நேரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்து நகை களைப் பறிமுதல் செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லிடா.
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறி ஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் ஹனிபா எனபவர் சமையல் காரராக வேலை பார்த்து வந்தார்.
இரண்டு நாட்க ளுக்கு முன்னர் லிடாவின் வீட்டு பீரோ சாவி காணாமல் போனது. வீட்டில் உள்ள அனைவரும் சாவியைத் தேடினர். சமையல் காரர் ஹனிபாவும் சேர்ந்து தேடினார்.
இந்நிலையில் நேற்று திடீரென சமையல் காரர் ஹனிபா, வேலைக்கு வர வில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.
வீட்டின் பீரோ சாவியை நேற்றும் தேடியதில் ஒரு மறை வான இடத்தில் இருந்தது. உடனடி யாக வழக்கறிஞர் லிடா, பீரோவைத் திறந்து பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தன.
வீட்டின் சமையல் காரர் ஹனிபா முதல் நாளே பீரோ சாவியை எடுத்து மறைத்து வைத் திருந்து மற்றவர் களுடன் சேர்ந்து காணாமல் போன சாவியைத் தேடி யுள்ளார்.
பின்னர் நேரம் பார்த்து பீரோவைத் திறந்து நகை களைத் திருடிச் சென்றுள்ளார். இது பற்றி கீழ்ப் பாக்கம் காவல் நிலைய த்தில் லிடா புகார் அளித்தார்.
ஹனிபா காணாமல் போனது குறித்தும் தகவல் தெரிவித்தார்.
உடனடி யாக போலீஸார், சமையல் காரர் ஹனிபாவின் செல்போன் அழைப்பு குறித்த விவரங்களை எடுத்து விசாரணை நடத்தியதில் ஹனீபா இருக்கும் இடம் தெரிந்தது.
உடனடி யாக போலீஸார் அவரைப் பிடித்தனர். அவரிட மிருந்து திருடிச் சென்ற தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்டனர்.
திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் கீழ்ப்பாக்கம் போலீஸார் நகை களை மீட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments