நடிகை அமலாபால் கார் வாங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று புதுச்சேரி போக்கு வரத்துத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித் துள்ளார்.
நடிகை அமலாபால் புதுச்சேரியில் சொகுசுக் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்துள்ள புகாரால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பிரபல சினிமா நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்ட் மாதம் மெர்சிடஸ் எஸ் என்ற சொகுசுக் காரை புதுச்சேரியில் வாங்கி யிருந்தார்.
1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள அந்தக் காரை வாங்கு வதற்கு திலாஸ் பேட்டை, தெரேசா நகரில் வசிப்ப தாக புதுச்சேரி முகவரி யையும் தந்துள்ளார்.
அந்தக்காரை அவரின் சொந்த மாநிலமான கேரளாவில் வாங்கினால் சுமார் 20 லட்சம் வரை அரசுக்கு வரி செலுத்தி யிருக்க வேண்டும்.
ஆனால், புதுச்சேரியில் காருக்கான வரித்தொகை குறைவு என்பதால் 1 லட்சத்து 15 ஆயிரம் மட்டும் செலுத்தி காரை வாங்கி யுள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது புதுச்சேரி அரசியலில் அனல் கிளப்பி யுள்ளது.
ஏற்கெனவே இதன் மூலம் கேரள அரசுக்கு வர வேண்டிய வரி வருவாயை ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால் மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசார ணையைத் தொடங்கி யிருக்கிறது.
மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தர விட்டிருந்தார்.
Thanks for Your Comments